முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என முத்திரை குத்தியவர் திமுக தலைவர் கருணாநிதி என தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி குற்றம் சாட்டியுள்ளார்.

முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என முத்திரை குத்தியவர் திமுக தலைவர் கருணாநிதி என தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஷேக் தாவூத் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஷேக் தாவூத் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:

கடந்த 25 ஆண்டுகளாக அதிமுக கூட்டணியில் உள்ளோம். கடந்த முறை கடையநல்லூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. குறைந்தபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். தற்போதைய தேர்தலில் 5 இடங்களை கேட்டோம். கஆனால் இதுவரை சீட் ஒதுக்கவில்லை. இருப்பினும் அதிமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என நிர்வாகிகள் குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம். அதன்படி கூட்டணி தொடர்கிறது. அதிமுக வெற்றிக்காக எங்கள் கட்சி தொண்டர்கள் பாடுபடுவார்கள். இஸ்லாமியர்களுக்கு அரணாகவே அதிமுக இருந்துள்ளது. எனவே இஸ்லாமியர்கள் அதிமுகவை ஆதரிப்பார்கள்.

குடியுரிமை சட்டத்தை நீக்க அதிமுக நடவடிக்கை எடுக்கும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை.

முஸ்லீம்களை தீவிரவாதிகள் என முத்திரை குத்துயவர் கருணாநிதி. முஸ்லீம்கள் தீவிரவாதிகள் இல்லை என அறிவித்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.

திமுக தேர்தல் அறிக்கையில் முஸ்லீம் நலனுக்காக ஒரு வார்த்தை கூட இல்லை.

பாஜக தீண்டதகாத கட்சி அல்ல.

திமுக வெற்றி பெற வேண்டும் என இஸ்லாமியர்களை பயமுறுத்த வேண்டாம். J

அதிமுக அரசில்
ஹஜ் மானியம் உயர்த்தப்பட்டுள்ளது.

இடம்: அண்ணா சாலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *