இலங்கையில் தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு திரைப்படம்” யாளி”.

குறைந்த பட்ஜெட்டில் இலங்கை தமிழ் இளைஞர்களால் தயாரிக்கப்பட்ட இப்படத்தை தக்ஷன் இயக்கியிருக்கிறார். இலங்கையில் நல்ல வரவேற்பைப்பெற்றது.
கடந்த காலங்களில் இலங்கை தமிழர் பகுதியில் போர் கால சூழலுக்குப் பின்னால் மீண்டெழுந்து திரைத்துறையில் தடம் பதித்து யாளி படம் மூலம் சாதனை படைத்துள்ள இப்பட குழுவினர் இப்படத்தை கடந்த நவம்பர் மாதம் 18 ஆம் தேதி சென்னையில் திரையிட்டனர்.

இந்த இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக abler HD Canada தொலைக்காட்சியின் சார்பில் சென்னையில் பிரசாத் லேபில் திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்களை அழைத்து படம் காண்பிக்கப்பட்டது ,
இதுசிறந்த விழிப்புணர்வு படம் என்றும் வாழ்த்தும் பெற்றது .
இதன் தொடர்ச்சியாக ஜனவரி மாதத்தில் abler HD Canada தொலைக்காட்சியின் தலைமையகமான கனடா நாட்டில் திரையிடப்பட உள்ளது .
இதனை அறிவிக்க சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைப்பெற்ற
இந்நிகழ்ச்சியில் பிரபல நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி அவர்களின் சகோதரர் கலந்து கொள்கிறார் .
இதுகுறித்து அப்படத்தின் உதவி இயக்குநரும் எடிட்டருமான துஜா மற்றும் கவிஞர் மாரிமுத்து ,செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு யாளி திரைப்படத்தை பற்றி பேசினர்.
கனடாவில் கிருஸ்துதாஸ் இப்படத்தை வெளியிடுகிறார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *