கோவையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த குடும்பத்தினர்க்கு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பில் ஒரு லட்சம் நிதி உதவி

கோவை: தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதால் தினந்தோறும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதே போல் தமிழகத்திலுள்ள பள்ளிவாசல்களில் பணிபுரியும் உலமாக்கள்,கொரோனா நோய் தொற்று காரணமாக 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கோவையைச் சேர்ந்த பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக தினந்தோறும் ஆதரவற்றவர்களுக்கு,ஏழை எளிய மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றனர். அதேபோல நிவாரணப் பொருட்களும் வழங்கி வருகின்றனர்.அந்த வகையில் தொடர்ந்து  கொரோனா காரணமாக உயிரிழந்த உலமாக்கள் குடும்பத்தினருக்கும், நலிவடைந்த உலமா மக்களுக்கு உதவி செய்யும் வகையில் கோவை பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பில் 1 லட்சம் நிவாரண நிதியாக பல் சமய நல்லுறவு இயக்க தலைவர் முகமது ரஃபீக் தலைமையில் கோவை மாநகர ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகளிடம் வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *