திருச்சி   தூய வளனார்  கல்லூரியில்  உலகத்  தாய்மொழி நாள்  விழா 

திருச்சி  தூய வளனார்  தன்னாட்சிக்  கல்லூரித்  தமிழாய்வுத்துறை  சார்பாக உலகத்  தாய்மொழி நாள்  சிறப்பாகக்  கொண்டாடப்பட்டது. வளன்  ஆயம் மின்னிதழை  வெளியிட்டு விழாவிற்குக்  கல்லூரி  முதல்வர் அருள்தந்தை ம.ஆரோக்கியசாமி சேவியர், சே.ச.‌ தலைமை உரை  வழங்கினார். முனைவர் பொன்.புஷ்பராஜ் மற்றும் தமிழ்த்துறை பணிமுறை இரண்டின் ஒருங்கிணைப்பாளர்   சி.பாக்கிய செல்வரதி ஆகியோர்  முன்னிலை  வகித்தனர்.  தமிழாய்வுத்  துறைத்தலைவர்  முனைவர்  ஞா.பெஸ்கி  வளன் ஆயம் மின் இதழ்  வரலாற்றை  சுட்டிக்காட்டியதுடன்,   ஆய்விதழின்  எதிர்காலத் திட்டங்களையும்  எடுத்துக்கூறி, அறிமுகவுரையாற்றானார். இளங்கலை  தமிழ் மூன்றாம்  ஆண்டு  மாணவர்  வீ. அட்சயா  வரவேற்புரை  வழங்கினார். திருச்சிராப்பள்ளி,  உருமு  தனலட்சுமி கல்லூரித் தமிழாய்வுத்  துறைத்தலைவர் முனைவர்  ந. விஜயசுந்தரி  அவர்கள்  இனியும்  தாய்மொழி  இருக்க,  இனிக்க  என்னும்  மையப்பொருளில்  சிறப்புரை  வழங்கினார்.  இளங்கலை  தமிழ் இரண்டாம்  ஆண்டு  மாணவர்            அ.தனப்பிரியா  நிகழ்ச்சிகளை  நெறியாள்கை செய்தார்.  பேராசிரியர்கள்,  தமிழ்த்துறை,  புள்ளியியல் துறை,   பொருளியல் துறை   உள்ளிட்ட  மாணவர்கள்  இவ்விழாவில்  பங்கேற்றனர்.  இவ்விழாவிற்கான  ஏற்பாடுகளை  வளனார்  தமிழ்ப்பேரவைத்  தலைவர் முனைவர்  ஆ.மரிய தனபால்  மற்றும்  துணைத் தலைவர்  இலா‌.சார்லஸ் ஆகியோர்   சிறப்பாகச்  செய்திருந்தனர். நிறைவில்   இளங்கலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவர் தி.பிரபு   நன்றியுரையாற்றினார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *