நோயாளியை பார்த்து விட்டு நகரப் பேருந்தில் சென்ற பெண்ணிடம் 15 சவரன் நகை, 10 ஆயிரம் பணம் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரை சேர்ந்த பெண் சாந்தி வயது சுமார் 40 இவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு இருந்த தனது உறவினரை பார்த்து விட்டு நகரப் பேருந்து TN-55 N 0404 என்ற பேருந்தில் புதுக்கோட்டை புதிய பேருத்து நிலையத்திற்கு தனது ஊருக்கு செல்ல பயணித்த போது பழனியப்பா பேருந்து நிறுத்தம் அருகே கையில் வைத்திருந்த பையில் உள்ள நகை 15 பவுன், 10 ஆயிரம் திருடப்பட்டது தெரிந்ததும் பேருந்து நிறுத்தத்தில் அலறியடித்து உருண்டு புரண்டுள்ளார், நகரப் பேருந்தை விடாமல் பயணிகளுடன் நகர காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டு பேருந்தை பரிசோதனை செய்தனர் காவல் துறையினர், பேருந்தில் கிடைக்காததால் நகை பணத்தை இழந்த பெண் சாந்தி மற்றும் அவரது மகளுடன் காவல் நிலையத்தில் புகார் பெற்றுக் கொண்டு நகர காவல்துறை ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் முக்கிய பொறுப்புகளில் பதவி வகிக்கும் அதிகாரிகள் பெண்களே ஆவார்கள் ஆனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சமூக ஆர்வலர்கள் பேசிக் கொண்டனர், நகை பணத்தை இழந்து ஒரு பெண் ரோட்டில் உருண்டு பிரண்டது பலரது கண்களில் நீர் கசிய ஆரம்பித்ததை நம்மாள் பார்க்க முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *