ஸ்ரீநிதி கேபிட்டல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்தோஸ்டார் கேபிட்டல் பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.300 கோடி இணை கடன் வசதியை பெற்றுள்ளது.

சென்னைஜன.11, 2022: முதன்மையான வணிக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு கடன் வழங்குவதில் தீவிர கவனம் செலுத்தி வரும் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு வளர்ந்து வரும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீநிதி கேபிட்டல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்தோஸ்டார் கேப்பிட்டல் பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து இணை கடன் வழங்கும் வசதியாக ரூ.300 கோடியை திரட்டியுள்ளது.

இந்தோஸ்டார் கேப்பிட்டல் பைனான்ஸ் நிறுவனம் என்பது அமெரிக்காவின் எவர்ஸ்டோன் கேபிட்டல் மற்றும் கனடாவின் புரூக்ஃபீல்ட் முதலீட்டிற்குச் சொந்தமான 10,000 கோடி நிகர மதிப்புள்ள நிறுவனமாகும். சென்னையில் இன்று  (ஜன. 11) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது ஸ்ரீநிதி கேபிட்டல் பிரைவேட்- மற்றும் இந்தோஸ்டார் இடையேயான கூட்டணி அறிவிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் இந்தோஸ்டார் கேபிட்டல் லிமிடெட் தலைமை செயல் அதிகாரி திரு. தீப் ஜக்கி மற்றும் ஸ்ரீநிதி கேபிட்டல் பிரைவேட் லிமிடெட் தலைமை செயல் அதிகாரி திரு.சி.செல்லமணி ஆகியோர் கையெழுத்திட்டனர். 

ஸ்ரீநிதி கேபிட்டல் பிரைவேட் லிமிடெட் தொடங்கப்பட்ட குறுகிய ஆண்டுகளுக்குள் இந்துஜா லேலண்ட் ஃபைனான்ஸ், டாடா ஃபைனான்ஸ் மற்றும் டெக்கான் ஃபைனான்ஸ் ஆகியவற்றிடம் இணை கடன் வசதி பெற்றது உள்பட ரூ.135 கோடி கடன் வசதியுடன் கூடிய நிறுவனமாக திகழ்கிறது.  25 இடங்களில் கிளைகளை கொணடு சுமார் 300க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் வலுவாக இயங்கி வருகிறது. இந்தோஸ்டார் நிறுவனத்துடனான இந்த இணை கடன் ஒப்பந்தம் ஸ்ரீநிதி நிறுவனத்தின் உற்சாகமிக்க பயணத்தின் மற்றொரு முக்கியமான மைல்கல் ஆகும்.  ஏனெனில் இந்நிறுவனம் 2022 ஆம் ஆண்டின் இறுதியில் 400 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வாகிக்கும் திறனை இந்த ஒப்பந்தத்தால் ஏற்படுத்த முடிந்துள்ளது.

ஸ்ரீநிதி கேபிட்டல் பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி திரு.எஸ்செல்லமணி நிதி திரட்டல் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் “ஒரு பெருந்தொற்றுக்கு மத்தியில் இந்த துறையில் நீண்ட அனுபவம் வாய்ந்த நிறுவனங்கள் கடுமையாக போராடிக் கொண்டிக்கும்போது,  “விரைவான வளர்ச்சி, தொழில்துறை வசூல் தொகை ஆகியவை அந்த பெரிய நிறுவனஙகளுக்கு இணையாக உள்ளதால் ஒட்டு மொத்த தொழில் துறையினரின் கவனத்தையும் ஸ்ரீநிதி கேபிட்டல் ஈர்த்துள்ளது என்றார். எங்களது விரிவாக்கத் திட்டங்களின் ஒரு பகுதியாக, இப்போது நாங்கள் தற்போது இந்தோஸ்டார் கேபிட்டல் பைனான்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளோம்.

இந்த கூட்டணி மூலம் 2022 ஆம் ஆண்டில் சிறிய ரக வாகனங்களை இயக்கும் நிறுவனங்கள், உரிமையாளர் மற்றும் ஓட்டுனர்கள் மற்றும் வங்கிகள் மற்றும் முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற முடியாத கீழ்நிலையில் உள்ளவர்களுக்கு ரூ.400 கோடிகளை வழங்க ஸ்ரீநிதி கேபிட்டல் திட்டமிட்டுள்ளது. அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நிறுவனத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதன் மூலம், எங்களது ஒட்டுமொத்த கிளைகளின் எண்ணிக்கையை 25ல் இருந்து 50 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இதன் ஒரு பகுதியாக வளர்ந்து வரக்கூடிய ஆர்வமுள்ள அனைத்து தொழில் முனைவோருக்கும் ஆதரவளிக்க ஸ்ரீநிதி உறுதிபூண்டுள்ளது.

இந்தோஸ்டார் கேபிட்டல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு. தீப் ஜக்கி கூறுகையில் “ஸ்ரீநிதி கேபிட்டல் பிரைவேட் லிமிடெட்டின் மிகப்பெரிய வளர்ச்சியை நாங்கள் கண்டுள்ளோம். இந்நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக. தொழில்துறையில் வலுவான நிறுவனமாக மாறுவதற்கான அடிப்படை கட்டமைப்பு உள்ளது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எங்களது இருப்பை மேலும் விரிவுபடுத்தும் முயற்சியில் தற்போது ஸ்ரீநிதியுடன் இணைந்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த இணைப்பின் முதல் கட்டமாக, தற்போது ரூ.300 கோடி மதிப்புள்ள இணை கடன் வழங்கும் வசதியை முடிக்க உள்ளோம். வரும் ஆண்டுகளில் இந்தத் துறையில் அதிக முதலீடு செய்ய நாங்கள் திட்டமிட்டுளோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *