தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள விளையாட்டு போட்டி

0 0

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் வருகின்ற 24-03-2021 முதல் 27-03-2021 வரை நடைபெறவுள்ள தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள திருச்சியை சேர்ந்த சர்வதேச தடகள விளையாட்டு வீரர் மணிகன்ட ஆறுமுகம் அவர்களிடம் பயிற்சி பெற்ற (RSK Sports Academy) யை சேர்ந்த மாற்றுத்திறனாளி தடகள விளையாட்டு வீரர்கள் திரு.மகேந்திரன் (குண்டு எறிதல்) திரு.வெங்கடேஷ் 100 மீட்டர் 200 மீட்டர் (ஒட்டபந்தயம்)
திரு.முகமது ஆசிக் 100 மீட்டர் ஓட்டபந்தயம் & நீலம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளனர் இவர்கள் அனைவரும்கடந்த மாதம் கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வானவர்கள் வருகின்ற 24- 03-2021 முதல்.27-03-2021வரை கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான மாற்றுதிறனாளிகளுக்கான தேசிய தடகள விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள இன்று 23-03-2021 செவ்வாய்கிழமை திருச்சியிலிருந்து பெங்களூர் புறப்பட்டனர் அவர்களை திருச்சியிலிருந்து மாற்றம் அமைப்பு தன்னார்வ மாற்றுதிறனாளி சங்கம், தாய்நேசம் அறக்கட்டளை, தினசேவை அறக்கட்டளை சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து அவர்கள் பயண செலவுகளுக்கான உதவிகளை வழங்கி வழியனுப்பி வைத்தனர்.

இந்நிகழ்வில் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் & நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தை சேர்ந்த சிவபிரகாசம், தாய் நேச அறக்கட்டளை நிர்வாகி ஹேப்சி சத்யராக்கனி தினசேவை அறக்கட்டளை நிர்வாகி S.பகவதி கலந்து கொண்டு பொன்னாடை அணிவித்த வாழ்தினர் இந்நிகழ்வில் அருணாசலம், சங்கர்,கதிரேசன்,பாலாஜி,மணிவேல், கிருபா,குமரவேல், சந்திரசேகர்,முருகன், ஶ்ரீதர்,ஜான், அல்லிகொடி சர்வேஸ்வரா, ரெங்கா, ராசிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *