தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தொழிற்சங்கத்தின், நிர்வாகிகள் மற்றும் நிர்வாக குழுஆலோசனை கூட்டம் சென்னை குமரன் நகர் நன்னல சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உறுப்பினர் படிவம், நிர்வாகிகள் படிவம் வெளியிடபட்டு, உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. பிறகு சங்க விதிமுறைகள், சங்க நிர்வாகிகளின் செயல்பாடுகள், அவர்களின் கடமைகள் மற்றும் சங்கத்தின் கொள்கைகள் அனைத்தும் வாசிக்கப்பட்டு அதன் பிரதிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது… பத்திரிகையாளர்களின் நலனை கருதி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும், நல வாரியம் அல்லது நலஆணையம் அமைத்திடவும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது…. மேலும், பத்திரிகையாளர்களுக்கு அரசின் சலுகைகளும் நலத்திட்ட உதவிகளும் முறையாக கிடைக்கப்பெறவேண்டியும், நகர்ப்புறங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் அல்லது குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் வழங்க வேண்டியும்,.. மேலும் பிற மாவட்டங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு 5 சென்ட் நிலம் அரசு வழங்க வேண்டியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது…. சென்னையில் ஒருங்கிணைந்த பத்திரிகையாளர்கள் குடியிருப்பு வளாகம் உருவாக்கி தகுதியுள்ள பத்திரிகையாளருக்கு வீடு வழங்க வேண்டும் போன்ற 20 அம்ச கோரிக்கைகள் சங்கத்தின் கொள்கையாகவும் தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டன….
இந்நிகழ்ச்சியில் பல்வேறு பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளை சேர்ந்த செய்தியாளர்கள்,.. புகைப்பட கலைஞர்கள், கலந்துகொண்டார்கள்.
தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தொழிற்சங்கத்தில் தீவிர உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்றது… தேர்ந்தேடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு நியமன கடிதம் வழங்கி கௌரவிக்கப்பட்டது…. இக்கூட்டத்திற்கு உள்ளாட்சி முரசு இணை ஆசிரியர், சங்க தலைவர் ஜுபிடர் ரவி தலைமை தாங்கினார்…. கொளத்தூர் நண்பன் இதழின் ஆசிரியர், சங்க பொதுச்செயலாளர் சத்யா வரவேற்றார்…. மனித விடியல் இதழின் ஆசிரியர் சங்க ஒருங்கிணைப்பாளர் மோகன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்…. சங்கத்தின் கொள்கைகள் விதிமுறைகளை சங்க துணை தலைவர் சுஜாதா வாசித்தார்…. கூட்டத்திற்கு, சென்னை, காஞ்சிபுரம், சேலம், திருப்பூர், கோவை, நெல்லை, தென்காசி, மற்றும் திருச்சி ஆகிய மாவங்களில் இருந்து பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டார்கள். இறுதியாக சங்கத்தின் பொருளாளர் மக்கள் ஆணையம் ஆசிரியர் முத்தையா நன்றி கூறினார்.
Average Rating