டிஜிட்டல் செயல்திறன்களையும் உலகளாவிய பிணைப்பையும்வலுப்படுத்தபெங்களூருவில் இந்தியா டெலிவரி சென்டரை தொடங்கும் வெர்ஷன் 1

பெங்களூருஇந்தியா மார்ச் 2025 –  டிஜிட்டல் மாற்றத்தில் முன்னணி நிறுவனமான வெர்ஷன் 1, பெங்களூரில் தனது அதிநவீன இந்திய டெலிவரி மையத்தை (IDC) அதிகாரப்பூர்வமாகத் திறந்துள்ளது. இது நிறுவனத்தின் சர்வதேச வளர்ச்சி மூலோபாயத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்;தனது வாடிக்கையாளர்களுக்கு மதிப்பினை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை இது வலுப்படுத்துகிறது.  உலகளாவிய நிறுவனங்களுக்கான அடுத்த தலைமுறை AI, கிளவுட் மற்றும் டிஜிட்டல் மாற்ற தீர்வுகளை வழங்குவதற்கு இந்தியாவின் சிறந்த திறமைசாலிகளைஇந்த மையம் பயன்படுத்தும். 

2019 முதல் இந்தியாவில் வலுவான இருப்பைக் கொண்டுள்ள வெர்ஷன் 1, தனது செயல்பாடுகளை அதிவிரைவாக விரிவுபடுத்தி, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியிலிருந்து உலகளாவிய வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கலான சவால்களை நிவர்த்தி செய்யும் முழுமையான டிஜிட்டல் தீர்வுகளை வழங்குவது வரை மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. புனே மற்றும் அகமதாபாத் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில்500க்கும் மேற்பட்ட நிபுணர்களை நிறுவனம் தற்போது பணியமர்த்தியுள்ளது. மேலும் புதுமை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை விரைவுபடுத்த 100க்கும் மேற்பட்ட  வேலைவாய்ப்புகள் இம்மையத்தில்தயாராக உள்ளன.

நாஸ்காம் – ன் துணைத் தலைவர் ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன், என்டர்பிரைஸ் அயர்லாந்து நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவிற்கானஇயக்குனர் திரு. ராஸ் குர்ரான் மற்றும் IDC மற்றும் வட அமெரிக்க செயல்பாடுகளின் நிர்வாக இயக்குனர் திரு. கணேஷ் கல்யாணராமன் ஆகியோர் இந்த மையத்தின் தொடக்கவிழா நிகழ்வில் முன்னிலைவகித்தனர். வெர்ஷன் 1 நிறுவனத்தின் பணியாளர்கள், முக்கிய தொழில்துறை தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப கூட்டாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.  இந்தியாவின் வளர்ந்து வரும் தொழில்நுட்ப சூழல் அமைப்பு மீது இந்நிறுவனம் கொண்டிருக்கும்ஆழமான அர்ப்பணிப்பு உணர்வை இம்மையத்தின் தொடக்கம்எடுத்துக்காட்டுகிறது.