ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்க வளாகத்தில் 17.09.2025 (புதன்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 3.00 மணிவரை அகத்தர உறுதி அமைப்புக்குழு, இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், யங் இந்தியன் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச இரத்ததான முகாம் மற்றும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் மிகச்சிறந்த முறையில் நடைபெற்றது.
கிளவுட்நைன், டாக்டர் குப்தாவின் பல் மருத்துவ நிபுணர்கள் மையம், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, தேராபந்த் யுவக் பரிஷத் மற்றும் காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் ஆகியவற்றுடன் இணைந்து பல் பரிசோதனை, கண் பரிசோதனை மற்றும் பொது பரிசோதனை என இலவச மருத்துவ முகாமை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ததுடன் லைஃப் லைன் இரத்த வங்கி மருத்துவர்கள் மூலம் இரத்தம் சேகரிப்பு செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இவ்விழாவில் கல்லூரித் தாளாளர் ஸ்ரீ வூட்டுக்குரு சரத்குமார் அவர்கள், பொருப்பு முதல்வர் முனைவர் பி.பி.வனிதா அவர்கள், துணை முதல்வர் முனைவர். எம். வி. நப்பின்னை அவர்கள், அகத்தர உறுதி அமைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் பி.பரணி குமாரி அவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி தேவஸ்தான ஊழியர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர்.
இந்த உன்னத முயற்சியின் ஒரு பகுதியாக,
92 உறுப்பினர்கள் இரத்த தானம் செய்ய பதிவு செய்தனர், அதில் 50 கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தகுதி பெற்று இரத்த தானம் செய்தனர்.
அதைத் தொடர்ந்து கண் பரிசோதனை, பல், பொது மற்றும் மகளிர் மருத்துவ பரிசோதனை இலவசமாக வழங்கப்பட்டது,
கிளவுட்நைன், டாக்டர் குப்தாவின் பல் மருத்துவ நிபுணர்கள், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, தேராபந்த் யுவக் பரிஷத் மற்றும் காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் லைஃப் லைன் இரத்த வங்கி மருத்துவர்களுக்கும் கல்லூரித் தாளாளர் ஸ்ரீ வூட்டுக்குரு சரத்குமார் அவர்கள் அவர்கள் நினைவுப் பரிசுகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்த முயற்சி மாணவர்களின் சமூக நலன் மற்றும் முழுமையான நல்வாழ்வுக்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
