சென்னை: ஜனவரி 02, 2025: 2025-ம் ஆண்டின்போது நடத்தப்படும் மயிலாப்பூர் திருவிழாவின் ஒரு அங்கமாக பிரபல நிதி நிறுவனமான சுந்தரம் ஃபைனான்ஸ் ஒரு சதுரங்க (செஸ்) போட்டியினை 2025 ஜனவரி மாதம் 11 மற்றும் 12 ஆகிய இரு தினங்களில் நடத்துகிறது. எண்.26, கிழக்கு மாடத்தெரு, மயிலாப்பூர், சென்னை 600004 என்ற முகவரியில் அமைந்துள்ள லேடி சிவசாமி ஐயர் மகளிர் மேனிலைப் பள்ளியில் அந்த இரு தினங்களிலும் காலை 8.00 மணி முதல், 11 மணி வரை 15-வது செஸ் போட்டியாக இது நடைபெறவிருக்கிறது.
8, 10 மற்றும் 12 வயதிற்கு கீழ்ப்பட்ட வகையினங்களில் சிறார்களுக்காக இந்த சதுரங்கப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த சதுரங்கப் போட்டியில் பங்கேற்க விரும்பும் சிறார்களின் பெற்றோர்கள், குழந்தைகளின் பெயர், பிறந்த தேதி மற்றும் பெற்றோர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண் ஆகிய தகவல்களை மின்னஞ்சல் வழியாக sfcorpcomm@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புவதன் மூலம் பங்கேற்பிற்கு பதிவு செய்யலாம்.