தமிழ்நாட்டில் பரவலாக கனமழை – மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன – மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
அவர்கள் தகவல்
தமிழ்நாட்டில் 25.10.2021 முதல் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், 37 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாநில சராசரி 21.98 மி.மீ. ஆகும்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 133.69 மி.மீட்டரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 101.56 மி.மீட்டரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 91.08 மி.மீட்டரும், சென்னையில் 78.39 மி.மீட்டரும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 72.66 மி.மீட்டரும், கடலூர் மாவட்டத்தில், 56.42 மி.மீட்டரும். திருவாரூர் மாவட்டத்தில், 48.31 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது.
ஆவடி (199 மி.மீ.), மாமல்லபுரம் (181.1 மி.மீ.), செங்கல்பட்டு (177 மி.மீ.). திருக்கழுகுக்குன்றம் (162 மி.மீ.), மதுராந்தகம் (154 மி.மீ.). சோழவரம் (148 மி.மீ.). பரங்கிப்பேட்டை (146.6 மி.மீ.). திருவள்ளூர் (126 மி.மீ.). காஞ்சிபுரம் (121.4 மி.மீ.). செம்பரம்பாக்கம் (120.4 மி.மீ.), கொத்தவாச்சேரி (120 மி.மீ.), பொன்னேரி (118.2), அம்பத்தூர் (117 மி.மீ.) ஆகிய 13 இடங்களில் மிக கனமழையும், 36 இடங்களில் கனமழை பெய்துள்ளது.
வடகிழக்கு பருவமழை 01.10.2021 முதல் 27.11.2021 வரை 603.38 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 345.70 மி.மீட்டரை விட 75 சதவீதம் கூடுதல் ஆகும்.
வடகிழக்கு பருவமழைக் காலத்தில், விழுப்புரம் (145%), திருப்பத்தூர் (138%), கோயம்புத்தூர் (116%), கன்னியாகுமரி (105%), திருச்சிராப்பள்ளி (95%) ஆகிய 5 மாவட்டங்களில் மிக அதிகப்படியான மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
Average Rating