சென்னை உலகளாவிய பொருளாதார உச்சி மாநாடு – 2021 மற்றும் எட்டாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு இணையவழி மூலமாகவும் நேரடியாகவும் சென்னையில் உள்ள ஓட்டல் லீ ராயல் மெரிடியனில் டிசம்பர் மாதம் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுதொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் உலகத் தமிழர் பொருளாதார மையம் மற்றும் மாநாட்டுத் தலைவர் டாக்டர் வி.ஆர்.சம்பத், விஜிபி குழுமத் தலைவர் விஜி. சந்தோஷம், முன்னாள் நீதியரசர் டி.என்.வள்ளிநாயகம் ஆகியோர் பங்கேற்று மாநாட்டு தொடர்பான துண்டறிக்கையை வெளியிட்டனர்.
தொடர்ந்து எட்டாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டு இணைச் செயலாளர் கமலஹாசன் கூறுகையில்..,
உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் பொருளாதாரத் துறையிலும் பண்பாட்டு துறையிலும் கலைத் துறையிலும் சமூகநல துறையிலும் மற்றும் திறன் மேம்பாட்டு துறையிலும் சிறப்புற்று திகழ ஊக்குவிப்பாக அமையும் இந்த மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம்தென்னரசு, தா.மோ. அன்பரசன் ஆகியோர் சிறப்புரையாற்ற இருக்கிறார்கள். அரசு செயலாளர்கள் முருகானந்தம் நிதித்துறை செயலாளர், கிருஷ்ணன் தொழில் துறை செயலாளர் ,டிபி யாதவ் கைத்தறித்துறை செயலாளர்,செல்வி. அபூர்வா இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலாளர், சம்பு, சமூக நலத்துறை செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார்கள்.
இந்த மாநாட்டில் விஐடி பல்கலைக் கழகத்தின் வேந்தர் டாக்டர் ஜி. விஸ்வநாதன், பாரத் நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் நிறுவனர் ஜெகத்ரட்சகன், ஜெம் நிறுவனங்கள் தலைவர் ஆர். வீரமணி, விஜிபி குழுமத்தலைவர் விஜி சந்தோஷம், பிஜிபி நிறுவனங்கள் தலைவர் பழனி பெரியசாமி, அமெட் பல்கலைக்கழகத்தின் வேந்தர் நாசே ராமச்சந்திரன், பிரசிடெண்ட் ஓட்டல் தலைவர் அபுபக்கர் மற்றும் பல்வேறு தொழில் அதிபர்கள் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்கள்.
வெளிநாட்டிலிருந்து முன்னாள் பிரதம அமைச்சர் டாக்டர் மோசஸ் வீராசாமி நாகமுத்து, மொரிசியஸ் முன்னாள் குடியரசுத் தலைவர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, தென் ஆப்பிரிக்கா அமைச்சர் ரவி பிள்ளை, மலேசியா முன்னாள் அமைச்சர் மாரிமுத்து,
இலங்கை முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு இணையவழியில் உரையாற்ற இருக்கிறார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிகேஎஸ். இளங்கோவன் ,டாக்டர் கலாநிதி வீராசாமி,பி.வில்சன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார்கள்.
இந்த மாநாடு உலகத் தமிழர் பொருளாதாரம் மையத்தாலும் சென்னை வளர்ச்சிக் கழகத்தால் தமிழ்நாடு அரசு மற்றும் பாண்டிச்சேரி அரசு இதர மாநில அரசுகள் இந்திய அரசு ஏனைய அயல்நாட்டு அரசுகள் உலகம் முழுவதும் உள்ள வர்த்தக தலைவர்கள் தொழில் அதிபர்கள் விழைத் தொழில் புரிவோர் கல்வியாளர்கள் ஆகியோர் உதவியோடு நடைபெற உள்ளது.
மாநாட்டின் இறுதி நாளன்று தலைச் சிறந்த 10 தமிழ் ஆர்வலர்களுக்கு “உலகத் தமிழ் மாமணி விருது” வழங்க இருக்கிறோம். மேலும் விவரங்களுக்கு www.econmic-conference.com இன்றைய இணைய பக்கத்தில் தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு மாநாட்டு இணைச்செயலாளர் கமல்ஹாசன் கூறினார்