அரசியல் கட்சிகள் நாகர்கோவில் திருநெல்வேலி தூத்துக்குடி சிவகாசி மாநகராட்சி மேயர் பதவிகளை நாடார்களுக்கு வழங்க வேண்டும் நாடார் சங்க தலைவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம்!
சென்னை திருவல்லிக்கேணி செல்வம் மஹாலில் நாடார் சங்க தலைவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் திருவல்லிக்கேணி நாடார் சங்க தலைவர் கே.சி.ராஜா தலைமையில் தமிழ்நாடு நாடார் சங்கம் தலைவர் ஜெ.முத்துரமேஷ்நாடார் சென்னை நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் இ.மு.சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்றது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நாடார் வேட்பாளர்களுக்கு கட்சி பேதமின்றி நாடார் சமுதாய மக்கள் வாக்களிக்க வேண்டும்
தமிழக வியாபாரிகளை மாமூல் கேட்டு கொலை மற்றும் கொலை முயற்சிகள் செய்து மிரட்டி பணம் பறித்து வரும் ரவுடிகளை தமிழக காவல்துறை என்கவுண்டர் செய்து காப்பாற்ற வேண்டும்
பெருந்தலைவர் காமராஜர் செய்த செயலை கருணாநிதி முதல்வராக இருந்தபோது செய்தார் என சட்டசபையில் பேசியதற்காக நீர்வளத் துறை அமைச்சர் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மன்னிப்பு கேட்க வேண்டும் அவருடைய பேச்சை சட்டமன்ற அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பெயர் சூட்ட வேண்டும் எனவும் நாடார்களின் கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன
இக்கூட்டத்தில் தட்சணமாற நாடார் சங்கம் சென்னை கிளை சேர்மன் வி.செல்வராஜ், எம்.கோயில்ராஜ் அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் சி.மு.சசிக்குமார் சேலையூர் நாடார் சங்கத் தலைவர் காந்தி எஸ்.சேகர்,கோட்டூர்புரம் நாடார் சங்க பொதுச்செயலாளர் கோட்டூர் ஆர்.பாஸ்கரன், சென்னை பாதுகாப்பு நாடார் பேரவை பொதுச்செயலாளர் கே.உதயகுமார்,அகில இந்திய நாடார் சக்தி தலைவர் த.விஜயா சந்திர சேகர். இந்து நாடார் பேரவை தலைவர் . மார்கெட் ராஜா,சிங்க நாடார் பேரவை தலைவர் ஏ.கணேசா, சென்னை நாடார் பாதுகாப்பு பேரவை வழக்கறிஞர் பிரிவு செயலாளர்கள் ஏ பி சீனிவாசன் எஸ்.கலைச்செல்வன்
பொழிச்சலூர் நாடார் சங்க இளைஞர் அணி தலைவர் கே.அருண்குமார். தமிழ்நாடு நாடார் சங்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.மணிகண்டன் மற்றும் நாடார் சங்க பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Average Rating