சென்னை : வாசனை திரவியங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் உலகின் முன்னணி நிறுவனமாக திகழும் டென்வர் நிறுவனத்தின் விளம்பர தூதராக பிரபல நடிகர் எஸ்டிஆர் நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகராக திகழும் எஸ்டிஆர் உடன் இணைந்துள்ள இந்நிறுவனம் இதன் தயாரிப்புகளை தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது.
வாசனை திரவியத்தின் சர்வதேச தரத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், தமிழகத்தின் முன்னணி பிராண்டாக தன்னை நிலைநிறுத்தும் வகையிலும் இளம் தலைமுறையினரிடம் தங்களது தயாரிப்புகளை கொண்டுசெல்லும் விதமாகவும் நடிகர் எஸ்டிஆர் உடன் இந்நிறுவனம் இணைந்துள்ளது. எஸ்டிஆர் தமிழகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இதன் காரணமாக தமிழக சந்தையில் தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்ய அவரை விளம்பர தூதராக இந்நிறுவனம் நியமித்திருக்கிறது.
இது குறித்து வனேசா கேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் தலைவருமான சௌரப் குப்தா கூறுகையில், எஸ்டிஆர் உடன் டென்வர் நிறுவனத்தின் கூட்டணி வலிமைமிக்க கூட்டணியாகும். அவர் தனது கடின உழைப்பின் மூலம் தமிழக ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். அவரது கடின உழைப்பை போற்றும் விதமாக அவரை டென்வர் நிறுவனம் அதன் விளம்பர தூதராக நியமித்திருக்கிறது. எஸ்டிஆர் உடனான இந்த கூட்டணி மூலம் இந்த பிராண்டின் நிலை மேலும் அடுத்த கட்டத்திற்கு உயரும். நடிகர் எஸ்டிஆர் – டென்வர் நிறுவனமும் அதன் பாணியிலும் ஆளுமையிலும் ஒரே நிலையில் இருப்பதால் இந்த கூட்டணி குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இது சிறந்த வெற்றிமிக்க கூட்டணியாக அமையும் என்று நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
இது குறித்து நடிகர் எஸ்டிஆர் கூறுகையில், ஆண்களுக்கான வாசனை திரவியங்கள் விற்பனை சந்தையில் டென்வர் நிறுவனம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அந்த பிராண்ட மீது எனக்கு இருந்த மதிப்பு காரணமாக நான் இந்நிறுவனத்தின் விளம்பர தூதராக இணைந்துள்ளேன். சர்வதேச அளவில் புகழ்பெற்ற பிராண்டுடன் இணைந்து பணியாற்றுவது என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தெரிவித்தார்.
டென்வர் நிறுவனத்தின் பிராண்ட் மேலாளர் ஆதித்யா யாதவ் கூறுகையில், தமிழகத்தில் காலடி எடுத்து வைப்பதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். நாங்கள் எஸ்டிஆரின் பெரிய ரசிகர்களாக இருக்கிறோம். மேலும் எங்கள் பிராண்டுடன் நன்றாகப் பொருந்திய ஒரு கலைஞருடன் இணைந்து பணியாற்றுவது என்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருடனான இந்த கூட்டணி எங்களின் தமிழக தொடக்கத்திற்கான சிறந்த ஒன்றாக இருக்கும் என்று தெரிவித்தார்.
@denverformen அவர்களின் TVC விளம்பரங்களைப் பாராட்டும் வகையில் #thescentofmysuccess பிரச்சாரத்தை அமைத்து இருக்கிறார்கள்.
Average Rating