தமிழ்நாடு நாடார் சங்க செயற்குழு கூட்டத்தில் மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
தமிழ்நாடு அரசு தேர்வாணைய குழுவிலும் சென்னை மதுரை உயர் நீதிமன்றங்களிலும் சமூகநீதி அடிப்படையில் நாடார் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என தீர்மானம்
தமிழ்நாடு நாடார் சங்கம் மாநில செயற்குழு கூட்டம் தமிழ்நாடு நாடார் சங்க தலைமை அலுவலகத்தில் தலைவர் ஜெ.முத்துரமேஷ்நாடார் தலைமையில் நடைபெற்றது.
அமைப்பாளர் Lkn ராஜா,துணைப் பொதுச்செயலாளர் ஸ்ரீபெரும்புதூர் ராஜேஷ், காப்பாளர் செ.வீரக்குமார் ,கொள்கை பரப்பு செயலாளர் சி.பா.பாஸ்கர் தலைமை நிலைய செயலாளர் வள்ளிவிளை பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில்
உக்ரேன் ரஷ்யா போர் நடைபெற்று வரும் இச்சூழலில் இந்திய மாணவர்களையும் மக்களையும் குறிப்பாக தமிழக மாணவர்களை பாதுகாப்பாக மீட்டு வரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி.
நாகர்கோயில் தூத்துக்குடி சிவகாசி மேயர் பதவிகளை நாடார் சமுதாயத்திற்கு வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.
தமிழகத்தில் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் அனைத்து சமுதாயத்திற்கும் கல்வி வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பெயரை சூட்ட வேண்டும்.
பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற பனை பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் பனைத்தொழில் அமைச்சர் பதவியை உருவாக்க வேண்டும்
இந்தியாவில் பல விமான நிலையங்களுக்கு ஒரே பெயர் இருப்பது போன்று சென்னை விமான நிலையத்திற்கும் பெருந்தலைவர் காமராஜர் விமான நிலையம் என பெயர் சூட்ட வேண்டும்
சென்னை விமான நிலைய மெட்ரோ நிறுத்தத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் விமான நிலையம் நிறுத்தம் என பெயர் சூட்ட வேண்டும்
தமிழ்நாடு அரசு தேர்வாணைய குழுவிலும் சென்னை மதுரை உயர் நீதிமன்றங்களிலும் சமூகநீதி அடிப்படையில் நாடார் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்
தமிழகத்தில் வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் ரவுடிகளை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னை விழுப்புரம் திருச்சி மதுரை மார்க்கமாக திருச்செந்தூருக்கு குலசை எக்ஸ்பிரஸ் புதிய ரயில் இயக்க வேண்டும்
துணைத்தலைவர்கள் குரு.ராமராஜ்,கெருகம்பாக்கம் பாலமுருகன், மாநில அமைப்புச் செயலாளர்கள் சி.மு.சசிக்குமார், அரசன் ராமசந்திரன், இளைஞரணி அமைப்பாளர் பா.வேல்குமார், பொதுச்செயலாளர் நெல்லைபிரபாகரன், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் மேக.பேச்சிராஜன். மாநில வழக்கறிஞர் அணி தலைவர் ரமேஷ்மாநில ஒருங்கிணைப்பாளர் வீரமாணிக்கம் சிவா மாநிலச் செயலாளர்கள் த.மு.சபாபதி,பா.இன்பசேகர்,
வணிக அணி ஒருங்கிணைப்பாளர் நற்பணி நாகராஜன், மாநில செயலாளர் மகேஷ் ஆதித்தன்,சித்திரைகுமார்,செல்வன்,கலை இலக்கிய அணி தலைவர் பொன் கி பெருமாள்,இணை செயலாளர் லிங்கம், சென்னை மண்டல அமைப்பாளர் சேர்மன் துரை,தலைவர் ஆலந்தூர் பத்மநாபன், செயலாளர் செந்தில்ராஜ், பட்டதாரிகள் ஆணி செயலாளர் கணேஷ் துரை, துணை காப்பாளர் நாஞ்சில் செந்தில், துணை அமைப்பாளர் ரா.சி.அருள்ராஜ், துணை செயலாளர் சுப்பிரமணி, இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர், சென்னை மண்டல இளைஞர் அணி தலைவர் சிவஜோதிராஜ்,தொண்டர் அணி அமைப்பாளர் முத்துவேல், மதுரவாயல் தொகுதி தலைவர் சேர்மசாமி,மாவட்ட தொகுதி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Average Rating