ஓலா உபர் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்குவதை தவிர்த்து இதைப் போன்ற புதிய இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும் என இயக்குனரும் நடிகருமான தருண் கோபி வாடகை வாகன வாடிக்கையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்…
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் புதிய வாடகை வாகன செயலியின் அறிமுக விழா நடைபெற்றது…
மோட்டோ ரைடர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வாகன வாடகை செயலினை திரைப்பட இயக்குனரும் நடிகருமான தருண் கோபி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்…
இந்த புதிய வாகன செயலியின் அறிமுக விழாவில் மோட்டோ ரைடர் நிறுவனத்தின் இயக்குனர்கள் சரவணக்குமார்,சிவக்குமார், கமல் மற்றும் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சந்துரு ஆகியோர் கலந்து கொண்டு மோட்டோ ரைடர் செயலியின் தன்மைகளை விரிவாக எடுத்துரைத்தினர்,
பின்னர் செயலியின் சிறப்பம்சங்களை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கு எடுத்துச் செல்வதில் சிறந்து விளங்கிய ஊழியர்களுக்கு நடிகர் மற்றும் இயக்குனருமான தருண் கோபி பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்..
இந்த செயலியின் மூலம் கார் இரண்டு சக்கர வாகனம் ஆட்டோ ட்ரக் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஒருங்கிணைந்த இந்த ஒரு செயலின் மூலமே வாடிக்கையாளர்கள் உபயோகிக்கலாம் எனவும் பெண்கள் மற்றும் வயது முதிர்ந்தோர்களுக்கு இந்த செயலியில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள உதவும் சிறப்பு அம்சங்கள் நிறைந்துள்ளதாக அதன் இயக்குனர்கள் தெரிவித்தனர்…
மேலும் இந்த செயலியின் அறிமுக விழாவில் அந்த நிறுவனத்தை சார்ந்த முக்கிய அதிகாரிகள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்…
பின்னர் செய்தியாளரிடம் பேசிய நடிகரும் இயக்குனருமான தருண் கோபி. .
ஓலா உபர் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களை தவிர்த்து இதுபோன்ற இந்திய நிறுவனங்களை வாடிக்கையாளர்கள் ஊக்குவிக்க வேண்டும் எனவும் இதன் மூலம் இந்திய தொழில் முனைவோர்கள் மற்றும் தொழிலாளர்கள் அதிக பயன் அடைவார்கள் என தெரிவித்தார், மேலும் தான் இயக்கிய திமிரு படத்தில் இரண்டாம் பாகம் வருகின்ற 15 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓ டி டி தளத்தில் வெளியாக உள்ளதாக தெரிவித்தார்…
Average Rating