IIRSI 2021 மாநாடு ஆரம்பம்! மாண்புமிகு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

https://youtu.be/r_yyySB7mjs சென்னை, டிசம்பர் 4, 2021: கண் அறுவைசிகிச்சைமீதான இந்தியாவின் மிகப்பெரிய வருடாந்திர மாநாடானIIRSI 2021 நிகழ்வை தமிழ்நாடு மாநிலத்தின்சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு, இளைஞர் நலன்மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் மாண்புமிகுஅமைச்சர் திரு. சிவ. வி. மெய்யநாதன் தொடங்கிவைத்தார்.  அந்த  IIRSI – ன் அறிவியல் கமிட்டியின்தலைவர் டாக்டர். மஹிபால் S. சச்தேவ், டாக்டர். அமீத்டரஃப்தார், டாக்டர். ஹிமான்ஷு மேத்தா மற்றும் IIRSI – ன் தலைமைச் செயலரும், டாக்டர். அகர்வால்ஸ் கண்மருத்துவமனையின் தலைவருமான புரொஃபசர் அமர்அகர்வால், இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.  உள்விழி உள்வைப்பு மற்றும் ஒளிவிலகல்அறுவைசிகிச்சைக்கான இந்திய சங்கத்தால்நடத்தப்படுகின்ற இந்த இரண்டு நாள் நிகழ்வில்முன்னணி கண் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று கண்மருத்துவவியல் துறையில் குறிப்பாக, கண்புரை மற்றும்ஒளிவிலகலுக்கான அறுவைசிகிச்சையில் அவர்களதுதிறன்களை வெளிப்படுத்தவிருக்கின்றனர் மற்றும்இத்துறையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள்குறித்த ஆய்வுகளையும், விளக்கங்களையும்சமர்ப்பிக்கவிருக்கின்றனர்.   சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு, இளைஞர் நலன்மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் மாண்புமிகுஅமைச்சர் திரு. சிவ. வி. மெய்யநாதன் இந்நிகழ்வில்உரையாற்றியபோது, “36வதுஉள்விழி உள்வைப்பு மற்றும் ஒளிவிலகல்அறுவைசிகிச்சை மாநாட்டின் தொடக்கவிழா நிகழ்வில்பங்கேற்பது எனக்கு அதிக மகிழ்ச்சியளிக்கிறது.  இந்தியா முழுவதிலுமிருந்தும் மற்றும் பிறநாடுகளிலிருந்தும் வந்திருக்கும் மருத்துவர்கள் கலந்துகொள்கின்ற இம்மாநாடு, கண் மருத்துவவியலில்நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கான புதிய வழிமுறைகள்உருவாக்கம் குறித்து ஒரு சிறப்பான தளத்தை இந்தமாநாடு உருவாக்குகிறது. சுகாதார பராமரிப்புத்துறையில், அதிலும் குறிப்பாக கண் மருத்துவவியலில்தென்னிந்தியாவும் மற்றும் தனிச்சிறப்போடு தமிழ்நாடும்எப்போதும் முன்னணியில் இருந்து வருகிறது.  கண்மருத்துவியலுக்கான பல பிரபல கல்வி நிறுவனங்கள்மற்றும் கண் மருத்துவமனைகளின் தாயகமாக தமிழ்நாடுதிகழ்கிறது.   கண் நோய்கள் மற்றும் சீர்கேடுகளினால்பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை இந்தியாவில்மிக அதிகமாகும்.  12 மில்லியன் பார்வைத்திறனற்றநபர்கள் இந்தியாவில் இருக்கின்றனர் மற்றும்பார்வைத்திறன் பாதிப்பை சரிசெய்ய வேண்டிய நிலையில்கூடுதலாக 450 மில்லியன் நபர்கள் இருக்கின்றனர் என்றுஉலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டிருக்கிறது. ஒருமில்லியன் நபர்களில் பார்வைத்திறன் பாதிப்புள்ளநபர்களின் எண்ணிக்கையில் உலகளவில் இந்தியாமுதன்மை வகிப்பது கவலைக்குரிய மற்றும் கவனத்தில்கொள்ளப்படவேண்டிய ஒரு முக்கியபிரச்சனையாகும். IIRSI போன்ற மாநாடுகள், இந்தியகண் அறுவைசிகிச்சை நிபுணர்களின் திறன்களை மேலும்மேம்படுத்துவதில் ஒரு மிக முக்கிய பங்காற்றுகின்றன,” என்று கூறினார்.  IIRSI – ன் தலைமைச் செயலரும், டாக்டர். அகர்வால்ஸ்கண் மருத்துவமனையின் தலைவருமான புரொஃபசர்அமர் அகர்வால், இந்நிகழ்வில் பேசுகையில், “உலகளவில் கண் மருத்துவவியலில் நிகழ்ந்திருக்கும்புத்தாக்கங்களை மையமாகக் கொண்ட IIRSI – ன் இந்தவருடாந்திர மாநாடு, இந்தியாவின் கண் மருத்துவவியல்துறையின் காலண்டரில் ஒரு மிக முக்கிய நிகழ்வாகஉருவெடுத்திருக்கிறது. இந்த ஆண்டு நிகழ்வில், முதன்மையான கண் அறுவைசிகிச்சை நிபுணர்கள்பங்கேற்று இத்துறையில் சமீபத்திய முன்னேற்றங்க்ளைகாட்சிப்படுத்தவிருக்கின்றனர். கண்புரை நோயின்சிக்கலான சூழ்நிலைகளை சமாளித்து சரிசெய்யபல்வேறு வழிமுறைகளையும் மற்றும் அதற்கானஅறுவைசிகிச்சை குறித்து கலந்துரையாடலின் வழியாகஅறுவைசிகிச்சை மருத்துவர்கள் அறிந்துகொள்வதற்குஒரு சிறந்த தளத்தை இம்மாநாடு வழங்கும்.  நோயறிதல்செயல்பாடுகள் மற்றும் சிகிச்சை ஆகிய அம்சங்களில்இந்தியாவில் கண் மருத்துவத்துறையின் திறன்களையும்மற்றும் செயல் உத்திகளையும் குறிப்பிடத்தக்க அளவுஅதிகரிப்பதில் IIRSI மிக முக்கிய பங்களிப்பைவழங்குவதாக இருந்து வருகிறது.” என்று கூறினார்.  “உள்விழி லென்ஸ் (IOL) உட்பதிப்பு என்பது, மிகப்பொதுவான கண் அறுவைசிகிச்சைகளுள்ஒன்றாகும்.  ஆனால், சில நேர்வுகளில் கண்ணில்லென்ஸ் இல்லாத காரணத்தால் நோயாளிகளுக்கு அதன்பின்புல ஆதரவு இருப்பதில்லை.  அத்தகைய நேர்வுகளில்ஐரிஷ் கிளா லென்ஸ் என்பதை அறுவைசிகிச்சைமருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர்.  இதில் ஒருஆதாயம் இருக்கிறது. புறவெளி விழித்திரைப்படலம்(ஐரிஷ்) இடுக்கிகளுக்கு இடையே அடைபட்டுஇருப்பதால், தையல்கள் இல்லாமல் இதனை விழித்திரைபடலத்தோடு பொருத்த முடியும்,” என்று IIRSI – ன்தலைமைச் செயலரும், டாக்டர். அகர்வால்ஸ் கண்மருத்துவமனையின் தலைவருமான புரொஃபசர் அமர்அகர்வால் மேலும் கூறினார்.  IOL உட்பதிப்பு மற்றும் ஒளிவிலகல் அறுவைசிகிச்சையில்அவர்களது அனுபவம் மற்றும் தொழில்நுட்பத்தில்நிகழ்ந்துள்ள மேம்பாடு பற்றி விவாதிக்கவும் மற்றும்முன்தடுப்பு செய்யக்கூடிய பார்வை திறனின்மைக்கானசிகிச்சைக்கு பங்களிப்பு வழங்கவும், இந்தியாவிலிருந்தும் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும்கண் மருத்துவவியல் நிபுணர்களை ஒரு அமைவிடத்தில்ஒருங்கிணைப்பதே IIRSI 2021 – ன் நோக்கமாகும்.  சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கும் வெளிநாட்டுநிபுணர்களின் பேருரைகள், இளம் கண்மருத்துவர்களுக்கான அமர்வு, ஹேண்ட்ஸ் ஆன்வெட்லேப் பயிற்சி திட்டங்கள், ஆப்தால்மிக் ப்ரீமியர் லீக்போட்டி, கண் மருத்துவவியலில் கோர்ட் மார்ஷியல், நிறுவனங்களின் ஸ்பான்சர்ஷிப் உடன் நடத்தப்படும்கருத்தரங்குகள், IIRSI திரைப்பட திருவிழா விருதுநிகழ்ச்சி, IFFA, IIRSI நிழற்பட போட்டி ஆகியவைஇம்மாநாட்டில் நடைபெறவிருக்கின்ற நிகழ்வுகளாகும்.  சென்னையில், ஐடிசி கிராண்டு சோழா ஹோட்டலில்டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய இரண்டு நாட்களில்இந்நிகழ்வு நடைபெறுகிறது. 

விழித்திரை அறுவைசிகிச்சையில் “நியூ நார்மல்” என்பதன் மீதான சர்வதேச கருத்தரங்கு

https://youtu.be/H_WHqHIgeTw சென்னை / 10 அக்டோபர் 2021: விழித்திரை அறுவைசிகிச்சை மீது நடைபெறும் இந்தியாவின் மிகப்பெரிய வருடாந்திர கருத்தரங்கின் 11-வது பதிப்பான ரெட்டிகான் (RETICON), என்பதனை இன்று சென்னையில் டாக்டர். அகர்வால்ஸ் ரெட்டினா ஃபவுண்டேஷன்...