அஇஅதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் மழையால் பாதிக்கப்பட்ட ஏழை பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வருமான ஓ . பன்னீர்செல்வம் சமீபத்தில் பெய்த பெருமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மையிலாபூர் , வேளச்சேரி , சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்து அப்பகுதி மக்களுக்கு உணவுகள் மற்றும் நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார் . உடன் தென் சென்னை தெற்கு (கிழக்கு ) மாவட்ட செயலாளர் எம் .கே . அசோக் , புரட்சித்தலைவி பேரவை இணைச் செயலாளர் டாக்டர் ஜெ .ஜெயவர்தன் , முன்னாள் தென்சென்னை தெற்கு மாவட்டச் செயலாளார் எம்.எம்.பாபு , முன்னாள் மயிலாபூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர .நடராஜன், சோழிங்க நல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் , சென்னை புறநகர் மாவட்ட செயலாருமான கே.பி.கந்தன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *