அஞ்சு பாய் கட்டாரியா ஹேம்ராஜ் கட்டாரியா டிரஸ்ட் சார்பாக 75வது குடியரசு தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள்!

பெரம்பூர்:75வது குடியரசு தினத்தை முன்னிட்டு
அஞ்சு பாய் கட்டாரியா ஹேம்ராஜ் கட்டாரியா டிரஸ்ட் சார்பில் குடியரசு தினவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
சென்னை பெரம்பூர் வீனஸ் பகுதியில் இதன் நிறுவனத்தலைவர் முனைவர் உத்தம் சந்த் கட்டாரியா அவர்கள் தலைமையில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. செய்தி வாசிப்பாளர் மோகன்ராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்வில் முதல் இந்திய பெண் பைக் வீராங்கனை அலிஷா அப்துல்லா, நடிகை ஓய். ஜி. மதுவந்தி நடிகர் அன்பு மயில்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். மேலும் இந்நிகழ்வில் தொழிலதிபர் ராஜூ சடகோபன், பத்மபிரியா ராஜு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பசுமை நாயகன், சமூக ஆர்வலர் புலவர் சுகுமாரி அருணகிரி உலக அழகி திஷா கோவிந்தராஜன், சமூக ஆர்வலர் உமாராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவினை நடிகரும்,சமூக ஆர்வலருமான பிரவீன் குமார் அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைந்திருந்தார். இந்நிகழ்வில்
மாற்றுத்திறனாளிகளுக்கு சைக்கிள், பணியாற்றும் அன்னதானம், பழ மரக்கன்றுகள், கல்வி உபகரணங்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.