அனைத்திந்திய மனித உரிமைகள் பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கான பயிற்சி பட்டறை

ஐக்கிய நாடுகள் சபை இணைப்பு என்ற சிறப்பு பெற்ற அனைத்திந்திய மனித உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தின்
தமிழ்நாடு மாநில தலைவர் ரேணுகா காளியப்பன் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சி பட்டறை நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர் தங்கராஜ், மாநில பொருளாளர் நித்தேஷ் அஸ்வின் , மாநில பொதுச் செயலாளர் மனிஷ் குமார் , மாநில நிர்வாகிகள் லோக்ஷினி, தீபிகா , காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் பிரசாந்த் , தர்மபுரி மாவட்ட தலைவர் சக்திவேல் , வடசென்னை மாவட்ட தலைவர் மதுசூதனன் , வடசென்னை மாவட்ட செயலாளர் ஆனந்த் , திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கல்யாண சுந்தரம் , கன்னியப்பன் , வழக்கறிஞர் மித்தேஷ் பவித்ரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மாநில , மாவட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர் ..

அப்போது ரேணுகா காளியப்பன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது

அனைத்திந்திய மனித உரிமைகள் பாதுகாப்பு சங்கம் ( All India Human Rights Protection Organisation தேசிய மாநாடு பிப்ரவரி மாதம் 16,17 , 18 ஆகிய தேதிகளில் கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடைபெற உள்ளது.. இந்த மாநாட்டிற்கு சங்க நிர்வாகிகள் , உறுப்பினர்கள் ஆயத்தம் ஆகும் வகையிலும் , மனித உரிமைகள் பற்றிய பொது அறிவை விளக்கும் வகையிலும் இந்த பயிற்சி பட்டறை நிகழ்ச்சி நடைபெறுகிறது.. அனைத்திந்திய மனித உரிமைகள் பாதுகாப்பு சங்கம் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து ஒரு அமைப்பாகும்.
இந்த அமைப்பின் நோக்கம் மனித உரிமை பாதுகாப்பு மகளிர் மேம்பாடு ஆகிய அம்சங்களை குறிக்கோளாக கொண்டுள்ளது என்றார்..