சுய-தூய்மை செய்யும் கார்பன் முககவசத்தை அறிமுகம் செய்யும் ப்ரீத்ஈஸி

சென்னை, 29 ஜனவரி, 2021: நாம் வாழ்க்கையை நடத்தும் வழிமுறையையே கொரோனா வைரஸ் மாற்றியிருக்கிறது; அவசியம் இருக்கும்போது மட்டுமே வெளியே செல்லுமாறு நிர்பந்தித்திருக்கும் இது, பாதுகாப்பாக இருப்பதற்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு பெரும்பாலும் டிஜிட்டல் முறையில் நாம் தொடர்புகொள்ளுமாறு செய்திருக்கிறது. தடுப்பூசி பரிசோதனைகளும் மற்றும் தடுப்பூசி போடப்படுவதும் தொடங்கியிருந்தாலும் கூட, தடுப்பூசி மருந்து போட்டுக்கொண்டிருந்தாலும் கூட பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் தொடர்ந்து பேணுவது அவசியம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இத்தகைய சூழலில், இதன் புத்தாக்கமான 3-அடுக்கு பாதுகாப்பினைக் கொண்டு உயிருக்கு ஆபத்தான இந்த வைரஸிலிருந்து நாம் பாதுகாக்கப்பட்டிருப்பதை உறுதி செய்கின்ற நெல்சன் லேப்ஸ் ஆல் சான்றாக்கம் செய்யப்பட்டிருக்கின்ற கார்பன் ஃபேஸ் மாஸ்க் – ஐ ப்ரீத் ஈஸி கன்சல்டன்ட் பிரைவேட் லிமிடெட் அறிமுகம் செய்திருக்கிறது. தனித்துவமான இந்த முகக்கவசம், சுயதூய்மை செய்துகொள்ளக்கூடியது மற்றும் சௌகரியமானது.

ஐரோப்பா மற்றும் யுஎஸ்ஏ – விலிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ள ப்ரீமியம் தரமான பொருளைப் பயன்படுத்தி, இந்தியாவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த முகக்கவசத்தின் துணி, NIOSH (தி நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஆக்குபேஷனல் சேஃப்டி அண்டு ஹெல்த்) – ஆல் பரிசோதித்து, உறுதி செய்யப்பட்டதாகும். உயிரி-தொழில்நுட்ப அடிப்படையில் தயாரிக்கப்பட்டு, உரிமம் பெற்றுள்ள இந்த துணியானது, வேறுபட்ட சூழ்நிலைகளில் அணிவதற்கு பரிசோதிக்கப்பட்டிருக்கிறது. காற்று வழியாகப் பரவும் நோய்க்கிருமிகள் மற்றும் ஆபத்தான இந்த வைரசுக்கு எதிராக இது ஒரு உகந்த பாதுகாப்பு கவசமாகும்.

“கார்பன் ஃபேஸ் மாஸ்க், சுயதூய்மை செய்துகொள்கிறது, வைரஸ் மற்றும் பாக்டீரியாவை கொல்கிறது; இதை துவைத்து, மீண்டும் பயன்படுத்தலாம் என்பதால் நீண்டகாலம் உபயோகப்படுத்தும் திறன் கொண்டதாகும். N95 மற்றும் பிற பாதுகாப்பு முககவசங்கள், நுண்ணியிரிகள் / நுண்கிருமிகளுக்கு எதிராக பாதுகாப்பை உறுதிசெய்ய தடுப்பு சல்லடை செயல்முறையை அடிப்படையில் பயன்படுத்துகின்றன. ஆனால், கார்பன் ஃபேஸ் மாஸ்க்கின் உட்புற அடுக்கு நுண்கிருமிகளுக்கு எதிரான பண்புகளைக் கொண்டிருக்கும் இறக்குமதி செய்யப்பட்ட உயர்தர நூலால் உருவாக்கப்பட்டிருப்பதால், வைரஸ்கள் மற்றும் நச்சுக்கிருமிகள் அதில் படும்போது அவைகள் திறம்பட அழிக்கப்படுவதை அது உறுதிசெய்கிறது. தோற்றுவாய் அளவிலேயே வைரஸ் தொற்றுக்கான வாய்ப்பு அளிக்கப்படுவதை இது உறுதிசெய்கிறது மற்றும் தொற்றுப்பரவலைக் குறைக்க உதவுகிறது,” என்கிறார் ப்ரீத் ஈஸி நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் திரு. பருண் அகர்வால்.

தொடர்பு ஏற்படும்போது வைரஸின் பாதிப்பை முகக்கவசத்தின் முதல் அடுக்கு குறைக்கின்ற நிலையில் இரட்டை மடிப்பு கொண்ட இரண்டாவது அடுக்கு நுண்ணுயிரிகள் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் இரண்டாம் நிலை தொற்று ஏற்படும் வாய்ப்பை அகற்றுகிறது. உயர்தர பயோ-யார்ன் ஆல் தயாரிக்கப்பட்டிருக்கும் மூன்றாவது (உள்ளார்ந்த) அடுக்கு, நீண்ட காலஅளவிற்கு காற்றில் கலந்திருக்கும் மாசுபடுத்திகளுக்கு எதிராக பாதுகாப்பை அதிகமாக்குகிறது (95% -க்கும் அதிகமாகும் – N95 முககவசங்களை விட இது சிறப்பானது).

“காற்றில் கலந்து பரவும் தொற்றுகளுக்கு எதிராக நிலைப்புத்தன்மையுள்ள, விரிவான மற்றும் சிக்கனமான விருப்பத்தேர்வாக பார்பன் ஃபேஸ் மாஸ்க் இருக்கிறது. காற்றின் மூலம் பரவும் தொற்று மற்றும் ஆபத்தான வைரசுக்கு எதிராக பாதுகாப்பை தருவதால் N95, பிரபலமாக பலரின் விருப்பமாக இருக்கின்ற போதிலும், சிலமணி நேரங்கள் பயன்படுத்தியதற்குப் பிறகு இதை தூக்கியெறிவது அவசியமாகும் மற்றும் இதை மீண்டும் பயன்படுத்த இயலாது,” என்று ப்ரீத் ஈஸி நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் திரு. பருண் அகர்வால் மேலும் விளக்கமளித்தார்.

இதற்கு மாறாக, கீழ்க்கண்ட காரணங்களினால் கார்பன் ஃபேஸ் மாஸ்க், சந்தையில் கிடைக்கும் பிற பாதுகாப்பு முககவசங்களை விட சிறப்பானதாக இருக்கிறது:

சுய – தூய்மையாக்கல் திறன்
உங்களுக்கும் மற்றும் பிறருக்கும் போதுமான பாதுகாப்பை உறுதிசெய்ய சுய – தூய்மை செய்துகொள்ள உயர்தர நூல் துணியால் செய்யப்பட்டிருக்கும் தனிச்சிறப்பான உள்ளார்ந்த அடுக்குடன் வெளிவரும் இது, அதன்மீது தொடர்பு கொள்ளும்போது வைரஸை கொல்கிறது. அத்துடன் நீண்ட நேரம் ஃபிரஷ்ஷாகவும் இதை வைத்துக்கொள்கிறது.

அதிக திறன்மிக்கது
N95 முககவசம் 95% tiu kl;LNk வடிகட்டல் jpwid toq;Ffpd;wNghJ fhu;gd; Kfftrk; 95% – க்கும் அதிகமான வடிகட்டல் திறனை தருகிறது. நெல்சன் லேப்ஸ் ஆல் சான்றாக்கம் பெற்றதாக கார்பன் முகக்கவசம் இருப்பதால், காற்றில் மிதக்கக்கூடிய துகள்மப்பொருட்கள் மற்றும் ஆபத்தான வைரஸ் உட்பட, காற்றின் மூலம் பரவுகின்ற நச்சுக்கிருமிகளுக்கு எதிராக சிறப்பான பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

பரிசோதிக்கப்பட்டு, புத்தாக்க உரிமை பெற்ற துணி
காற்றின் வழியாகப் பரவும் நோய்கள் மற்றும் மாசுபடுத்திகளிலிருந்து பாதுகாப்பான, சௌகரியமான, நீண்டநேர பாதுகாப்பை உறுதிசெய்ய உயிரி தொழில்நுட்ப அடிப்படையில் புத்தாக்க உரிமை பெற்ற, NIOSH* பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட துணியைக் கொண்டு இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சருமத்திற்கு பாதிப்பில்லாமல் இருப்பதற்கு போதுமான அளவு பரிசோதனை செய்யப்பட்டுள்ள இந்த முகக்கவசம் நீண்டநேரம் அணிந்திருந்தாலும் கூட அதிக சௌகரிய உணர்வை தருகிறது.

பயோ-யார்ன் உள்ளார்ந்த பாதுகாப்பு
நுண்ணுயிரிகளுக்கு எதிரான அம்சங்களை உள்ளடக்கிய மூலக்கூறுகளின் சங்கிலிகள் உயிரி தொழில்நுட்பத்தின் வழியாக கச்சா துணியின் அடிப்பகுதியில் இணைக்கப்பட்டிருக்கிறது. நேரடி தொடர்பு ஏற்படும் நேர்வில் பாக்டீரியாக்கள், பூஞ்சை தொற்றுகள் மற்றும் வைரசுக்கு எதிராக இந்த துணி அதி வேகமாக செயலாற்றுகிறது. அதுமட்டுமன்றி, இதனை துவைத்த பிறகும் கூட இந்த பண்பியல்பு குறையாமல் அப்படியே அதில் தக்க வைக்கப்படுகிறது.

துவைத்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய இது நீடித்து உழைக்கக்கூடியது
ஐரோப்பா மற்றும் யுஎஸ்ஏ – லிருந்து கொள்முதல் செய்யப்பட்ட புத்தாக்க உரிமை பெற்ற இழைமங்களிலிருந்து தயாரிக்கப்படுகின்ற கார்பன் ஃபேஸ் மாஸ்க், நான்-மெல்ட் ப்ளோன் உத்தியினைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டிருப்பதால், இதை சலவை செய்யமுடியும் மற்றும் 50 முறைகள் வரை சலவை செய்து மீண்டும் பயன்படுத்தலாம். பிற N95 முககவசங்களை பயன்படுத்திய பிறகு தூக்கியெறிய வேண்டும் என்பதால், இவைகள் அதிக செலவுள்ளதாகவும், அசௌகரியமானதாகவும் இருக்கின்றன.

சௌகரியமானது மற்றும் சுவாசிக்க எளிதானது
சௌகரியம் மற்றும் சுவாசிப்புத்திறனை வழங்குவதற்காக உயர்தர பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த முகக்கவசம், அதன் புத்தாக்கமான துணியின் காரணமாக, ஒவ்வொரு நாளும் பயன்பாட்டு அனுபவத்தையும் சிறப்பாக மேம்படுத்துகிறது. சுவாசத்தை வெளியேற்றும் விஷயத்தில் கார்பன் முகக்கவசம் அதிக வசதியானது; சுவாசத்தை வெளியே விடுவதை எளிதாக்க N95 முகக்கவசங்களுக்கு கூடுதல் காற்று வெளியேறல் வால்வு தேவைப்படுகிறது மற்றும் தொற்று நீக்கப்பட்ட தூய்மையான நிலைகள் அவசியப்படும்போது N95 முககவசங்களின் பயன்பாடு பரிந்துரைக்கப்படுவதில்லை.

தோலுக்குப் பாதுகாப்பானது
முககவசத்தின் மெட்டீரியல், நச்சுத்தன்மை அற்றதாக இருப்பதால் அதன் வாழ்நாள் காலம் முழுதும் நீடிக்கின்ற ஈரப்பத பண்புகளினால் சருமத்தை பாதுகாக்கிறது. பயோ – யார்ன் ஆல் உருவாக்கப்பட்டுள்ள இந்த துணி, நாற்றமில்லாத அனுபவத்தை வழங்குகின்றபோது, தூய்மையை பேணுவதில் உதவுகிறவாறு நுண்ணுயிரி செயல்பாட்டையும் குறைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *