தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதிய சங்கத்தினர் அடையாள உண்ணாவிரதம்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் வாரிய ஊழியர்களுக்கு 2 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள பணி நிறைவு பணப்பலன்களை வழங்க வலியுறுத்தி அடையாள உண்ணாவிரதம் இருக்கபட்டது. இதில் 350 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இவ்வுண்ணாவிரத நிகழ்வை மத்திய மாநில அரசுகளின் பொதுத்துறை ஓய்வூதியர்களின் பேரமைப்பின் தலைவர்
திரு டி.பாலசுப்பிரமணியன் அவர்கள் துவக்கி வைத்தார்.
உண்ணாவிரதம் போராட்டத்திற்கு ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு ந. ராசாகுமார் தலைமை வகித்தார்.

550 ஓய்வூதியர்களுக்கு தொகையாக நிலுவையில் சுமார் ரூபாய் 250 கோடி உள்ளது. இத் தொகையை உடனே வழங்குமாறு தமிழக அரசையும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *