மார்ச் 22, 2020 முதல் தொடங்கிய கோவிட் தொற்றுநோயின் அபாயம் கருதியும் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.
300 நாட்களுக்குப் பிறகு,
அரசாங்கத்தின் அறிவிப்பிற்கிணங்க முகப்பேர் வளாகத்திலுள்ள வேலம்மாள் மையப் பள்ளி, 2021 ஜனவரி 19 ஆம் தேதியன்று 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் சூழலைப் பாதுகாப்பாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க அரசாங்கத்தின் வழிகாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி சாத்தியமான அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வேலம்மாள் மேற்கொண்டுள்ளது. மாணவர்கள் வருவதற்கு முன்பு, அனைத்து வகுப்பறைகள், கழிவறைகள் மற்றும் அனைத்து முக்கியப் பகுதிகளும் சுத்திகரிக்கப்பட்டன.
அனைவருக்குமான சுத்திகரிப்பு வசதி,
வெப்ப ஸ்கேனர் மூலம் செய்யப்படும் சுத்திகரிப்பு வசதி, முகமூடியின் பயன்பாடு மற்றும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் பின்பற்றப்பட வேண்டிய சமூக இடைவெளி போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஊழியர்களுக்குப் போதுமான வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. நீண்ட இடைவெளியான 9 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளிக்கு வருவதற்குரிய உற்சாகத்துடன்
மாணவர்கள் காணப்பட்டனர். மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்துச் செல்வதில் பள்ளி நிர்வாகம் மகிழ்ச்சியடைந்துள்ளது.
