வித்தியாசமான உலக சாதனையை நிகழ்ச்சிய இரு சிறுவர்களுக்கு அங்கீகாரம் அளித்த யுனிவர்சல் அச்சீ வர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ப்யூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்
சென்னை :யுனிவர்சல் அச்சீ வர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ப்யூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் அபிஷேக் இம்மானுவேல் ஜோசப் மற்றும் கெவின் எபினேசர் ஜோசப் ஆகிய பள்ளி மாணவர்களின் உலக சாதனை முயற்சி சென்னை புரசை வாக்கத்திலுள்ள கிறிஸ்தவ அப்போஸ்தல சபையில் நடைப்பெற்றது.இந்த உலக சாதனை முயற்சியில் அண்ணன் – தம்பி இருவரும் இணைந்து ஆங்கில பைபிள் வசனங்களை மனப்பாடம் செய்து 1 மணி நேரம், 9 நிமிடம் , 36 நொடிகளில் வாசித்து உலகத்திலேயே முதன் முறையாக இந்த உலக சாதனையை நிதழ்த்தி இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்தனர்.
யுனிவர்சல் அச்சீ வர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ப்யூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவன தலைவர் முனைவர் பாபு பால கிருஷ்ணன் மற்றும் துணைத் தலைவர் முனைவர் கண்ணன் குமாரசாமி ஆகியோர் இணைந்து இரு பள்ளி மாணவர்களின் வித்தியாசமான உலக சாதனையை அங்கீகரித்தனர். மேலும் இவர்களுக்கு கேடயம் மற்றும் மெடல் வழங்கி கெளரவிக்கப்பட்டது.இந்த இரு சிறுவர்கள் உலக சாதனை படைக்க இவர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் உறுதுணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *