ஈக்காட்டுத்தாங்கல் சென்னை,அக்டோ.12-
சென்னை டிபன்ஸ்காலனி ஆபீஸர்ஸ்கிளப்பில் இளைஞர்கள் புகையிலை மற்றும் போதைபழக்கத்தில் இருந்தும்,இளம்பெண்கள் பாலியல் துன்பத்தில் இருந்து பாதுகாக்க வலியுறுத்தி ஈகை ராஜ் சிலம்பம் பயிற்சி பள்ளி100 மாணவ மாணவிகள் தொடர்ச்சியாக 10 மணி நேரம் சிலம்பம் சுற்றிகலாம் உலகசாதனை நிகழ்ச்சிநடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை எஸ் எஸ் எல் எப் குழுமத்தின் நிறுவன தலைவர் டாக்டர் ஜி. சக்திவேல் ஐயா துவக்கி வைத்தார். அப்போது அவர் இக்கலையானது நமது பாரம்பரிய விளையாட்டுக்களில் முக்கியமானதாகும்,இந்த கலை கற்பதால் மனதை ஒரு முகப்படுத்த முடியும் என்றார்.
மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில்தமிழ்நாடு காவலர் குடும்ப கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் வி. சந்திரமோகன் யு விஜயன் தேசிய செயலாளர்சிலம்பம் இளைஞர் விளையாட்டு சங்கத்தின் எம் சௌந்தரராஜன் மாநிலத் தலைவர் சிலம்பம் இளைஞர் விளையாட்டு சங்கத்தின் எம் திருநாவுக்கரசு மாநில பொருளாளர்சிலம்பம் இளைஞர் விளையாட்டு சங்கத்தின்
கலந்துகொண்டுமாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கினார்.
இந்த கலம் உலக சாதனை நிகழ்ச்சியை பற்றி ஈகை ராஜ் சிலம்பம் பயிற்சி பள்ளி ஆசான் மற்றும் சிலம்பம் இளைஞர் விளையாட்டு சங்கத்தின் மாநில செயலாளர் டாக்டர் ஆர்.சந்துரு கூறுகையில் இந்தக் கலையில் வெற்றி பெற்று பெறுகின்ற சான்றிதழ்கள் வேலை வாய்ப்பு முன்னுரிமை வழங்க வேண்டும். 3% விளையாட்டு இட ஒதுக்கீட்டில் இந்த கலையை சேர்க்க வேண்டும். அதனால் மாணவர்எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்றார்.
உடன் மூத்த ஆசான் என். வெங்கையா, ஆசான்கள் ஆர்.சந்துரு எம்டிசி, இ. ஹேமாமாலினி மற்றும் பயிற்சி பள்ளியின் பயிற்சியாளர்கள் ஜி. பிரியங்கா, வி. பாலாஜி, எஸ்.பிரஜேஷ், ஜி. யுவன் வெங்கட்,பி.ஆர்.வனிதவர்ஷினி, சி.எம் கிருத்திகா ஈகைராஜ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
