தமிழக தொழில் துறையினரை முதலீடு செய்ய அழைக்கிறது, எத்தியோப்பியா! 

0 0

இந்திய ஆப்பிரிக்க வர்த்தக கவுன்சில் (The India Africa Trade Council) மற்றும் கோமிஸா (COMESA – Common Market for Eastern and Southern Africa) அமைப்புகள், இந்தியா – எத்தியோப்பியா வர்த்தகக் கருத்தரங்கிற்கு (India – Ethiopia Trade Conference) இன்று (19 மார்ச் 2022) ஏற்பாடு செய்திருந்தன. இதில் தென்னிந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழகத்திலிருந்து ஏராளமான தொழில்துறையினர் பங்கேற்றனர். இந்தியப் பொருளாதார வர்த்தக சங்கத்தின் தலைவர் டாக்டர் ஆசிப் இக்பால் (Dr. Asif Iqbal), இந்தியாவுக்கான எத்தியோப்பிய தூதர் மேதகு டாக்டர் டிஸிட்டா முலுகெட்டா (HE Dr. Tizita Mulugeta)-வை வரவேற்று, இரு நாடுகளிடையே வளர்ந்து வரும் வர்த்தக வாய்ப்புகளுக்கு உறுதுணையாக இருப்பதை உறுதி செய்தார். இந்நிகழ்ச்சியில் எத்தியோப்பியாவின் வணிகத் துறை அமைச்சர் திரு. டெமிசேவ் கெபெடெ டெக்லேவும் (Mr. Demesev Kebede Tekle) கலந்துகொண்டார்.   

எத்தியோப்பியாவில் முதலீடு செய்வதற்கு இந்தியத் தொழில்துறையினர் மிகப் பெருமளவில் ஆர்வமாக உள்ளனர். இரு நாடுகளிடையே பெருமளவிலான வர்த்தக உடன்பாடு குறிப்பாக மருந்துத் தயாரிப்பு,தகவல் தொழில்நுட்ப மேம்பாடு, ஜவுளி, ஆயத்த ஆடை ஆகியவற்றில் முதலீடு செய்ய இந்திய நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. 

இந்த நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவு அமைச்சக செயலர் திரு. வெங்கடாசலம் முருகன் ஐ.எஃப்.எஸ்.தலைமையேற்று பேசுகையில், “ஆப்பிரிக்க பிராந்தியத்தில் இந்தியாவுக்குள்ள நல்லுறவு காரணமாக தமிழ்நாட்டின் தொழில்துறையினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இப்பிராந்தியத்தின் அனைத்து பகுதியில் உள்ளவர்களுக்கும் செய்யத் தயாராக உள்ளோம்”என்று குறிப்பிட்டார். இவர் இதற்கு முன்பு வெளியுறவு அமைச்சகத்தில் கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்கப் (இ.எஸ்.ஏ.) பிரிவின் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.

கோமிஸாவின் இயக்குநரான டாக்டர் பி. ராமகிருஷ்ணன் (பி.ஆர்.கே.) பேசுகையில், “இந்தியா தனது 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில் ஆப்பிரிக்க நாடுகளுடன் நல்லுறவை பேண எடுத்துவரும் முயற்சிகளைப் பட்டியலிட்டார். இதற்கு முன்பு எத்தியோப்பியாவின் முன்னேற்றத்துக்கு மத்திய அரசு பல்வேறு கடன் உதவிகளை எக்ஸிம் வங்கி வாயிலாக 7.5 கோடி டாலர் (சுமார் ரூ.500 கோடி) தொழில் பூங்கா அமைக்க அளித்துள்ளது. இது தொடர்பாக ஏற்றமதி – இறக்குமதி வங்கி (எக்ஸிம் வங்கி) கடந்த ஜூலை 2020-ல் ஒப்பந்தம் செய்தது. இந்தியா- எத்தியோப்பியா இடையிலான தூதரக உறவு நவீன காலத்தில் உருவானதாயிருப்பினும் இரு நாடுகளிடையேயான வர்த்தக உறவு ஜூலை 1948-லிருந்து தொடர்கிறது” என்றார்.

எத்தியோப்பியாவில் சில முக்கியமான இந்திய நிறுவனங்களான கெடிலா பார்மாசூடிக்கல்ஸ் பி.எல்.சி. (Cadila Pharmaceuticals PLC), எஸ் அண்ட் பி எனர்ஜி சொல்யூஷன்ஸ் பி.எல்.சி. (S & P Energy Solution PLC), டாடா இன்டர்நேஷனல் லிமிடெட் (Tata International Limited), கருடுரி குளோபல் பி.எல்.சி. (Karuturi Global PLC), கனோரியா ஆப்பிரிக்கா டெக்ஸ்டைல்ஸ் பி.எல்.சி. (Kanoria Africa Textiles PLC), மோகன் குழும நிறுவனங்கள் (Mohan Group of Companies),அன்மோல் பிராடக்ட்ஸ் எத்தியோப்பியா பி.எல்.சி. (Anmol Products Ethiopia PLC), அர்விந்த் என்விசோல் லிமிடெட் (Arvind Envisol Limited),டெலிகம்யூனிகேஷன்ஸ் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (Telecommunications Consultants India Limited), எக்ஸிம் பாங்க் ஆப் இந்தியா (EXIM Bank of India), எஸ்.சி.எம். கார்மென்ட் (SCM Garment), ராஜ் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் (Raj Agro Industries),ஜே ஜே டெக்ஸ்டைல் (Jay Jay Textile), ரோடோ பி.எல்.சி. (Roto PLC), வொயிட்பீல்ட் காட்டன் பார்ம் பி.எல்.சி. (Whitefield Cotton Farm PLC), ருச்சி அக்ரி பி.எல்.சி. (Ruchi Agri PLC), வெர்டான்டா ஹார்வெஸ்ட்ஸ் பி.எல்.சி. (Verdanta Harvests PLC), நேகா இன்டர்நேஷனல் பி.எல்.சி. (Neha International PLC), ஏசியன் பெயின்டிங்ஸ் (Asian Paintings), அர்விந்த் மில்ஸ் (Arvind Mills), அல்லான்சன்ஸ் லிமிடெட் (Allanasons Ltd.), கனோரியா (Kanoria), எஸ்.வி.பி. குரூப் (SVP Group), போன்டானா பிளவர் பி.எல்.சி. (Fontana Flower PLC), பாலாஜி மேனுபாக்சரிங் பி.எல்.சி. (Balaji Manufacturing PLC), சமாகா ஸ்டோன்ஸ் பிரைவேட் லிமிடெட் கோ. (Samaka Stones Pvt. Ltd. Co.), வெலாசிட்டி அப்பேரல் (Velocity Apparel)ஆகியவை செயல்படுகின்றன.

எத்தியோப்பியாவின் மேம்பாட்டுக்கு இந்திய அரசு தொடர்ந்து உதவிகளை அளித்து வருகிறது. எத்தியோப்பியாவில் சர்க்கரை ஆலை அமைப்பது, மின்சார கேபிள் அமைப்பது உள்ளிட்டவற்றுக்கு 100கோடி டாலர் கடனுதவி அளித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில், இந்தியாவிடமிருந்து அதிகபட்ச உதவி பெறும் நாடுகள் வரிசையில் எத்தியோப்பியாவும் ஒன்றாகும். பின்ச்சா மற்றும் வோன்ஜி ஷோயா சர்க்கரை ஆலைகள் (Finchaa and Wonji Shoa sugar factories) மற்றும் டென்டாஹோ (Tendaho)சர்க்கரை ஆலையின் முதல் பிரிவு எத்தியோப்பியாவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கான கடன் உதவி இந்தியாவின் எக்ஸிம் வங்கி மூலம் வழங்கப்பட்டுள்ளது. 64 கோடி டாலர் கடனுதவி மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்திட்டப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. எத்தியோப்பியாவில் அடிஸ் அபாபாவில் (Addis Ababa) உள்ள லயன் மருத்துவமனைக்கு (Lion Hospital) 64-ஸ்லைஸ் சிடி ஸ்கேன் கருவியை இந்தியா நன்கொடையாக வழங்கியுள்ளது.

எத்தியோப்பியாவில் உள்ள தொழில் வாய்ப்புகளை தமிழக தொழில்துறையினருக்கு இந்தியாவுக்கான எத்தியோப்பிய தூதர் விவரித்தார். அத்துடன் இரு நாடுகளிடையிலான வர்த்தக உறவு மேலும் வலுப்பெற தேவையான ஒத்துழைப்புகள் முழு வீச்சில் அளிக்கப்படும் என்றார். முதலீட்டுக்கான வாய்ப்புகளை தொழில்துறையினர் ஆராய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

கோமிஸா இயக்குநர் டாக்டர் பி. ராமகிருஷ்ணன் மேலும் இது குறித்து கூறுகையில், “இந்தியா – எத்தியோப்பியா இடையிலான வர்த்தக உறவு புதிய உச்சத்தை எட்ட வேண்டும் என்ற இலக்கைக் குறிக்கோளாகக் கொண்டு இந்தியக் குழு மே 2022-ல் அதிகபட்ச ஆர்வத்துடன் எத்தியோப்பியாவுக்கு செல்ல உள்ளது. எத்தியோப்பியாவில் உள்ள நிறுவனங்களை இந்திய நிறுவனங்களுடன் இணைப்பது தொடர்பான வாய்ப்புகளையும் ஆராய உள்ளது. இந்தியக் குழுவினர் பார்மா, தடுப்பு மருந்து,வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, இறைச்சி பதனிடுதல் மற்றும் விவசாயத்தில் தொடர்ந்து கூட்டாக செயல்படவும் இத்தொழிற்துறைகளில் உள்ள வாய்ப்புகளை கண்டறிந்து மிகச் சிறந்த கட்டமைப்பை உருவாக்குவதோடு இங்கு கல்வி மையங்கள் அமைக்கவும் முன்வரவேண்டும்” என்றார்.

இந்திய ஆப்பிரிக்க வர்த்தகக் கவுன்சில் (ஐ.ஏ.டி.சி.) இந்திய நிறுவனங்களுக்கு இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு மற்றும் வழிமுறைகளை ஆராய்ந்து அதைச் செயல்படுத்துகிறது. இதன் மூலம் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் வர்த்தக தொழில் வாய்ப்புகளை மேம்படுத்தி வருகிறது. குறிப்பாக பார்மா துறையினர் எத்தியோப்பியாவில் தங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்த பெருமளவிலான வாய்ப்புகள் உள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *