சிவசேனா கட்சியின் தமிழக மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை தனியார் அரங்கில் நடைபெற்றது

0 0

சிவசேனா கட்சியின் தமிழக மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் தனியார் அரங்கத்தில்வைத்து நடைபெற்றது சிவசேனா கட்சியின் தமிழக மாநில தலைவர் சிதறால்.வி.ராஜேஷ்ஜி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சிவசேனா கட்சியின் தேசியசெயலாளர் அபிஜித் அட்சூல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் இந்நிகழ்ச்சியில் கேரளா மாநில தலைவர் ஹரிகுமார் உட்பட முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் பேசிய மஹாராஷ்டிரா அபிஜித் அட்சூல் கூறுகையில் மஹாராஷ்டிரா போல் அனைத்து மாநிலங்களிலும் சிவசேனா கட்சி சிறப்பாக முன்னேறி வருகிறது பால்தாக்கரேஜி காங்கிரஸுடன் கூட்டணி வைப்பதை ஒருபோதும் விரும்பவில்லை ஆனால் தற்போது அவரின் மகனான உத்தவ்தாக்கரே காங்கிரஸூடன் கூட்டணி அமைத்து சிவசேனா கட்சியை அழிவின் பாதைக்கு இழுத்து சென்றார் ஆனால் மஹாராஸ்டிரா முதலமைச்சர் ஏக்நாத்ஷிண்டே சதிகாரர்களிடமிருந்து சிவசேனா கட்சியை மீட்டெடுத்துள்ளார் தேர்தல் ஆணையமும் ஷிண்டேஜி தலைமையிலான சிவசேனாவையே அங்கீகரித்துள்ளது தொடர்ந்து மஹாராஷ்டிராவை போல் தமிழகத்திலும் சிவசேனா கட்சி தமிழக மாநில தலைவர் ராஜேஷ்ஜி அவர்களின் தலைமையில் சிறப்பாக வலுப்பெறும் எனவும் வரும் பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்லாது தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றம் துவங்கி பஞ்சாயத்து தேர்தல் வரை சிவசேனா கட்சி சந்தித்து வேட்பாளர்களை முன்னிறுத்தும் அதற்காக நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்றவேண்டும் எனவும் தெரிவித்தார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %