சென்னை: சாம்சங் இந்தியா, செயற்கை நுண்ணறிவு, இணைப்பு வசதி மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்கள் மூலம் அன்றாட வாழ்க்கையை எளிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட 2026 ‘பெஸ்போக் ஏஐ’ வீட்டு உபயோக சாதனங்களின் புதிய வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது. குருகிராமில் நடைபெற்ற ‘தி பிரீஃப் குருகிராம்’ நிகழ்ச்சியில் இந்தப் புதிய சாதனங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் குளிரூட்டல், துணி துவைத்தல், சமையலறை மற்றும் வாழ்க்கை அறை உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளை SmartThings தளத்தின் மூலம் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு ஒருங்கிணைக்கிறது என்பது விளக்கப்பட்டது.
புதிய வரிசையில் Google Gemini வசதியுடன் கூடிய AI Vision Family Hub குளிர்சாதனப் பெட்டி, 32 அங்குலத் திரை, காணொலி மூலம் உணவு வகை பரிந்துரை, குடும்பப் பராமரிப்பு மற்றும் செல்லப்பிராணி பராமரிப்பு வசதிகளுடன் அறிமுகமாகியுள்ளது. மேலும், செயற்கை நுண்ணறிவு கட்டுப்பாடுகள் மற்றும் PM1.0 காற்றுத் தூய்மைப்படுத்தும் வசதியுடன் Bespoke AI WindFree™️ Pro குளிரூட்டி, 23,000 நுண்துளைகள் மூலம் நேரடியாக காற்று மோதாத குளிரூட்டலை வழங்கும் Infinite 1-Way Cassette AC with WindFree™️ ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. AI Energy Mode மூலம் மின்சாரப் பயன்பாட்டை 30 சதவீதம் வரை குறைக்க முடியும்.
“பல்வேறு வாழ்க்கை முறைகளைப் புரிந்துகொண்டு, நிஜ வாழ்க்கையில் பயனளிக்கும் வசதிகளை வழங்கும் செயற்கை நுண்ணறிவு துணையாக எங்களின் 2026 Bespoke AI சாதனங்கள் செயல்படும்,” என்று சாம்சங் தென்மேற்கு ஆசியாவின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஜே.பி. பார்க் தெரிவித்தார்.
இந்தச் சாதனங்களில் AI Home திரை, Bixby குரல் உதவியாளர், Voice ID, Samsung Knox பாதுகாப்பு மற்றும் SmartThings இணைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. SmartThings மூலம் சாதனங்களைக் கண்காணித்தல், தொலைநிலைக் கட்டுப்பாடு மற்றும் மின்சாரச் சேமிப்பு உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படுகின்றன.
மேலும், SmartThings மூலம் 7 ஆண்டுகள் மென்பொருள் புதுப்பிப்புகள் வழங்கப்படுகின்றன. Infinite 1-Way Cassette AC தொடக்க விலை ரூ.1,60,000, Family Hub விலை ரூ.4,00,690, Bespoke AI WindFree™️ Pro AC விலை ரூ.69,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
