விழிப்புணர்வு மற்றும் நேர்மையை மேம்படுத்த இந்தியன் வங்கி நடைப்பேரணியை நடத்தியது

Chennai, October 28, 2026: நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நெறிமுறை சார்ந்த நடைமுறைகளை மேம்படுத்தும் நோக்கில், இந்தியன் வங்கி, அக்டோபர் 26 முதல் நவம்பர் 1, 2026 வரை நடைபெறும் விழிப்புணர்வு வாரத்தின் ஒரு பகுதியாக நடைப்பேரணியை நடத்தியது.

இந்தியன் வங்கியின் மேலாண்மை இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான திரு. பினோத் குமார், செயல் இயக்குநர்கள் திரு. அசுதோஷ் சௌத்ரி, திரு. சிவ் பஜ்ரங் சிங், திருமதி மினி டி.எம்., தலைமை விழிப்புப் பணி அதிகாரி திரு. வி. ஆனந்த் மற்றும் வங்கியின் பிற மூத்த அதிகாரிகள் முன்னிலையில் நடைப்பேரணியைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை, எம்.ஆர்.சி. நகர் பகுதியில் அமைந்துள்ள இந்தியன் வங்கியின் மேனேஜ்மென்ட் அகாடமி ஃபார் க்ரோத் அண்ட் எக்ஸலன்ஸ் (IMAGE) வளாகத்தில் தொடங்கிய நடைப்பேரணி, அதே இடத்தில் நிறைவடைந்தது. இப்பேரணி அருகிலுள்ள பகுதிகள் வழியாகச் சென்றது.