ஒமிக்ரான் -மிளகாய் குடிநீர்

ஒமிக்ரானால் வரும் உடல் வலிக்கு மிளகாய் குடிநீர் சரியான தீர்வு என கொரோனா காலங்களில் சிறப்பாகப் பணியாற்றி 2021 சித்த மருத்துவ துறைக்கான மீடியா சேம்பேர் விருது பெற்றவரும், சென்னை அரசினர் சித்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை மரு.பாஸ்கர் இராஜமாணிக்கம் எம். டி(சி )
திருவண்ணாமலை சித்தர்களின் குருபாரம்பரிய கருத்துக்களை விவரித்துள்ளார்.

ஒமிக்ரான் (B. 1.1.529)மற்ற கொரோனா வைரஸ்கள் ஆல்பா, பீட்டா,காமா மற்றும் டெல்டா போலல்லாமல் மிக வேகமாக பரவி வருகிறது. இருந்தாலும் பயப்பட தேவையில்லை, எச்சரிக்கையுடன் இருந்தால் நோயிலிருந்தும், பக்க விளைவுகளில் இருந்தும் தற்காத்துக் கொள்ள முடியும்.

ஒமிக்ரான் பொதுவான அறிகுறிகளான
சுரம்,உடல் வலி மற்றும் சோர்வு, மூக்கு ஒழுகுதல், தொண்டை புண், தும்மல், இருமல் போன்றவை இருந்தாலும் தற்போது நோயாளிகளிடம் அதிகமான உடல் வலி, தலைவலி, மூக்கில் சளி ஒழுகுதல் மற்றும் சுரம் மிக முக்கியமான குறி குணமாக உள்ளது.சிலரிடம் வயிற்றுப்போக்கு காணப்படுகிறது.

எனவே மேற்சொன்ன குறிகுணங்கள் தெரிந்த உடனேயே வீட்டில் சித்த மருந்துகள் இல்லை எனினும் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு செய்யப்படும் மிளகாய் குடிநீர் உடனடியாக அருந்தினால் நோய் தீவிரத்தன்மை அடையாமல் தடுக்க முடியும்.

தேவையான பொருட்கள்:

பச்சை மிளகாய் ஒன்று ( சிறு துண்டுகளாக அரிந்தது )
சீரகம்(1 சிட்டிகை)
மஞ்சள் தூள் (1 சிட்டிகை)
உப்பு (1 சிட்டிகை)

செய்முறை

மேற்கண்டவற்றை 200 மில்லி நீரில் 3 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி இளஞ்சூட்டில் காலை 50 மில்லி வீதம் அருந்த வேண்டும். அடுத்த அரைமணி நேரம் எதுவும் சாப்பிடக்கூடாது. சிறுவர்கள் 10 மில்லி முதல் 30 மில்லி வரை அருந்தலாம்.

ஐந்து மாதத்திற்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் அருந்தலாம். 5 மாதத்திற்கு உட்பட்ட கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி அருந்தலாம். பாலூட்டும் தாய்மார்களும் அருந்தலாம். குறிப்பாக அல்சர் நோயாளிகளும் அருந்தலாம் வயிற்றுப்புண்ணை ஏற்படுத்தாது.

இதைத் தொடர்ந்து சுரம் மற்றும் உடல்வலி குறையும் வரை ஒரு நாளைக்கு ஒரு முறை அருந்தி வர வேண்டும். மற்ற வேளைகளில் நொச்சி குடிநீர், கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீர், போன்றவை அருந்தி வரலாம்.

‘பட்டினி பெருமருந்து ‘…. எனும்
சித்தர்களின் வாக்குப்படி சுரம் குறையும் வரை உணவு எடுத்துக் கொள்ளாமல் இருத்தல் அல்லது இலகு உணவாக அரிசி கஞ்சி, இட்லி,இடியாப்பம் போன்றவை எடுத்துக் கொண்டால்
சுரத்திலிருந்து எளிதில் விடுபடலாம்.

மிக முக்கியமாக மந்தமான உணவுப்பொருட்கள் தவிர்த்தல், குளிர்ந்த நீர், குளிர்ச்சியான பொருட்கள், எண்ணெய் பொருட்கள்,தயிர், பனி, குளிர்காற்றில் இருத்தல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *