அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவிர்கள் நல சங்கம் 5ஆம் ஆண்டு துவக்க விழா

அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவிர்கள் நல சங்கம் 5ஆம் ஆண்டு துவக்கவிழா சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தலைவர் ஆ.ஹென்றி
தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி நீதியரசர் கற்பக விநாயகம்,
தி. நகர் பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான ஏழுமலை , ,
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் எம்ப்ளாயிஸ் யூனியன் தேசிய தலைவர் இரா.முகுந்தன் , மக்கள் பாதுகாப்பு உரிமை கழகம் தலைவர் எம் . ஜெயராமன், பீப்பிள் ஃபோரம் ஆஃப் இந்தியா தலைவர் எஸ். மணிமொழியான் ஆகியோர் கலந்துகொண்டு சங்கத்தின் புதிய லோகோவை வெளியிட்டனர்.
மேலும் நிகழ்ச்சியில் சங்கத்தின் சார்பாக நூல் வெளியிட்டனர். அதனைத் மேடையில் பேசிய அவர்கள் அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்களின் நலன் காக்க தமிழக அரசிடம் பல்வேறு உதவிகள் பெற்று தர தயாராக உள்ளதாக தெரிவித்தனர் மேலும்

அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவிர்கள் நல
சங்கம் மாநில தலைவர் மதிமாறன் மற்றும் மாநில பொருளாளர் சுரேஷ்பாபு ஆகியோர் தலைமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர்
ஜி. கணகேஸ்வரன் வரவேற்று பேசினார். மாநில தலைவர் மதிமாறன், பொருளாளர் சுரேஷ் பாபு ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
பெயிண்டர்கள் கட்டுமானத் தொழில் வரையறைக்குள் தான் வருகிறார்கள்‌ ஆனால் எங்களுக்கு தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் அதற்கான பிரதிநிதித்துவமோ , முக்கியத்துவமோ தரப்படுவதில்லை.
இது சம்பந்தமாக அதிகாரிகளையும் அமைச்சர்களையும் சந்தித்து முறையிட்டும் அதற்கு தீர்வோ தகுந்த பதிலோ இதுவரையில் தரப்படவில்லை
பெயிண்டர்களுக்கு வாரியத்தின் முக்கியத்துவம் கொடுத்து அரசின் திட்டங்கள் சென்றடையும் படி ஆவண செய்ய வேண்டும் என்றும்
பெயிண்டர்களுக்கு வாரிய தலைவர் பதவி கொடுக்க வேண்டும் அப்போதுதான் பெயிண்டர்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் இது சம்பந்தமாக
தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் வைக்கிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
எங்கள் தொழிற்சங்கத்தின் சார்பில் நலிந்த பெயிண்டர்கள் ஓவியர்களுக்கு பல்வேறு உதவிகளையும் அவர்கள் குடும்பத்தில் உள்ள மாணவ மாணவிகள் பத்தாம் வகுப்பிலும் பன்னிரண்டாம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண் பெறும் மாணவ மாணவிகளுக்கு பண உதவிகளையும் வழங்கி மேற்படிப்புக்கு செல்வதற்கு நாங்கள் பல உதவிகளை செய்து வருவதாகவும் தொடர்ந்து மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் சங்கத்தின் சார்பில் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்தனர் மேலும் இந்த நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதும் உள்ள சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் குடும்பத்தினர் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்