https://youtu.be/BP44hggMuPc சென்னை, ஜன.4– சென்னையின் சிறந்த பன்னோக்குமருத்துவமனையாக விளங்கி வரும் ரேலாமருத்துவமனை சிறுவயது சிறுவனுக்கு செய்த சிறுகுடல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் ஆசியசாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. பெங்களூரைச் சேர்ந்த 4 வயது சிறுவனுக்கு இந்தஅறுவை சிகிச்சையை இம்மருத்துவமனைவெற்றிகரமாக செய்துள்ளது. மிகவும் அரிதான இந்தஅறுவை சிகிச்சை ஆசிய சாதனை புத்தகத்தில்அங்கீகரிக்கப்பட்டு அதற்கான சான்றிதழ் ரேலாமருத்துவமனையின் தலைவரும் நிர்வாகஇயக்குனருமான பேராசிரியர் முகமது ரேலாவிடம்இன்று வழங்கப்பட்டது. அவரிடம் இந்த சான்றிதழைஆசிய சாதனை புத்தகத்தின் பிரதிநிதி விவேக், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர்ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில்வழங்கினார். இது குறித்த விவரம் வருமாறு, ஆரோக்கியமாகஇருந்த குழந்தை குகனுக்கு திடீரென்று வாந்திஏற்பட்டது. இது நிற்காமல் தொடர்ச்சியாக 2 நாட்கள்இருந்த காரணத்தால் இது குறித்து கவலை அடைந்தஅவனது தந்தை சுவாமிநாதன், வழக்கம்போல் வரும்வாந்தி என்று நினைத்து அருகில் உள்ளமருத்துவமனைக்கு சென்று குழந்தையைமருத்துவர்களிடம் காட்டினார். அந்த குழந்தையைபரிசோதித்த மருத்துவர்கள், அவனது குடல் சுருண்டுஅடைப்பு இருப்பதாகக் கூறினார்கள். மேலும் இதுமிகவும் சிக்கலான நிலை என்றும், இதன் காரணமாக குடல் வளையம் முறுக்கி, அந்த குடல் வளையத்திற்குசெல்லும் ரத்த வினியோகம் தடைபட்டுள்ளது என்றும்தெரிவித்தனர். மேலும் குடல் வளையம்செயல்படாமல் முற்றிலும் சிதைந்துவிட்டது என்றும்அது அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட வேண்டும்என்றும் மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதாவதுவயிறு தோலுடன் இணைந்து காணப்பட்டது. இதுஸ்டோமா என்று அழைக்கப்படும். சிறுகுடல், செரிமான அமைப்பின் கீழ் பகுதியில் இருக்கும். இதுஉணவில் இருந்து பெரும்பாலானஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ளும். சிறுகுடல்இல்லாமல், அந்த குழந்தை எதைச் சாப்பிட்டாலும், அது ஜீரணமாகாது, அது ஸ்டோமாவிலிருந்துவெளியே வந்துவிடும். வாய் வழியாக எடுக்கும் எந்தஉணவும் இரைப்பை சுரப்புகளை அதிகரிக்கும், இதன் விளைவாக நீரிழப்பு மற்றும் எலக்ட்ரோலைட்சமநிலையின்மை ஏற்படும். இதன் காரணமாக அந்தகுழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் 24 மணிநேரமும் உட்செலுத்துதல் பம்ப் மூலம் ரத்தநாளம் வழியாக வழங்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து அந்த குழந்தைக்கான சிகிச்சைக்குரேலா மருத்துவமனை பரிந்துரைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரேலா மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட சிறுவன் குகனை பரிசோதித்த டாக்டர்கள், குடல் மாற்று அறுவை சிகிச்சையேசிறந்த வழி என்று அவனது பெற்றோரிடம்தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவனதுதந்தை சுவாமிநாதன், அவரது சிறுகுடலின் ஒருபகுதியை நன்கொடையாக வழங்க முன் வந்தார்.மிகவும் அரிதான இந்த அறுவை சிகிச்சையைபேராசிரியர் முகமது ரேலா தலைமையிலான மருத்துவர்கள் குழுகடந்த செப்டம்பர் 13–ந்தேதி செய்தது. சுமார் 7 மணிநேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையில்அவனது தந்தையின் 150 செ.மீ. சிறு குடல் அவனதுவயிற்றில் பொருத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒரு சில மாதங்கள் அந்தகுழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து நரம்பு மூலம்வழங்கப்பட்டது. பின்னர் அதைத் தொடர்ந்து 5 வாரங்கள் வாய் வழியான உணவு வழங்கப்பட்டது. தற்போது அந்த சிறுவன் பூரண குணமடைந்துவிட்டான். தற்போது அவனது சிறுகுடல் நன்றாகவேலை செய்வதால் மற்ற குழந்தைகளைப் போலஅவனும் அவன் விரும்பும் உணவைச் சாப்பிடலாம். அவனது தந்தை சுவாமிநாதனும் தற்போது இயல்புநிலைக்கு திரும்பி தனது வழக்கமான பணிகளைசெய்து வருகிறார். அரிய சிறுகுடல் மாற்று அறுவை சிகிச்சை செய்துசிறுவனை மற்ற குழந்தைகளைப் போல் இயல்புநிலைக்கு கொண்டு வந்து ஆசிய சாதனைபுத்தகத்தில் இடம் பிடித்த ரேலா மருத்துவமனைநிர்வாகம் மற்றும் மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறைஅமைச்சர் மா. சுப்பிரமணியன் தனது பாராட்டுகளைதெரிவித்துக் கொண்டார். இந்த அறுவை சிகிச்சை குறித்து பேராசிரியர் முகமதுரேலா கூறுகையில், ரத்த நாளம் மூலம் உணவுசெலுத்துவதில் இருந்து விடுபட்டு சாதாரண உணவைஅந்த சிறுவன் எடுத்துக் கொள்வதை பார்த்து எனக்குமிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவனது சிறுகுடல்அகற்றப்பட்டதிலிருந்து, அவனுக்கு பல வாரங்கள்நரம்பு மூலம் உணவு செலுத்தப்பட்டது. அந்த சிறுவன்ஆரோக்கியமாக இருப்பதற்கு சிறுகுடலைமாற்றுவதே நிரந்தர தீர்வு என்பதை அறிந்த நாங்கள்அவனுக்கு சிறுகுடல் மாற்று அறுவை சிகிச்சையைவெற்றிகரமாக செய்து முடித்தோம். சிறுகுடல் மாற்றுஅறுவை சிகிச்சை என்பது இந்தியாவில் மிகவும்அரிதாகவே செய்யப்படுகிறது. மேலும் தங்கள்குழந்தையை மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குகொண்டு வர வேண்டும் என்று உறுதியுடன் இருந்தஅவனது பெற்றோரை நான் இத்தருணத்தில்பாராட்டுகிறேன் என்று தெரிவித்தார். இது குறித்து குகனின் தந்தை சுவாமிநாதன்கூறுகையில், குகனுக்கு ஏற்பட்ட இந்த பிரச்சினைகுறித்து அறிந்து நாங்கள், அவனுக்கு சிறுகுடல்மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாக இருக்கும்என்பதை கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். ஆனால் இது குறித்து விரிவான மருத்துவவிளக்கங்கள் எங்களுக்கு அளிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து இந்த சிகிச்சையை மேற்கொள்ளநாங்கள் முன் வந்தோம். ரேலா மருத்துமனையில்உள்ள மருத்துவர்களின் உறுதியான நடவடிக்கையைநான் பாராட்டுகிறேன். ஒவ்வொரு நிலையையும்அவர்கள் எங்களுக்கு விளக்கி இந்த சிகிச்சையைமேற்கொண்டது எங்களுக்கு மிகுந்த நிம்மதியைஅளித்தது. எங்கள் குழந்தைக்கு வாழ்க்கையில்இரண்டாவது வாய்ப்பை வழங்கிய பேராசிரியர்முகமது ரேலா அவர்களுக்கும், மருத்துவமனைக்குநாங்கள் என்றென்றும் நன்றிக் கடன்பட்டுள்ளோம்என்று தெரிவித்தார். குழந்தைகளுக்கான கல்லீரல், பித்த நாளசிகிச்சைக்கான மூத்த ஆலோசகர் டாக்டர் நரேஷ்சண்முகம் கூறுகையில், பொதுவாக குழந்தைகள்வால்வுலஸ் காரணமாக குடலின் ஒரு சிறிய பகுதியைமட்டுமே இழக்கிறார்கள். சிறுகுடல்