கிங்மேக்கர்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் 17 ஆம் ஆண்டு துவக்க விழா

என் தேசம் என் மக்கள் என்ற இலக்குடன் செயல்பட்டு வரும் கிங்மேக்கர்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் 17 ஆம் ஆண்டு துவக்க விழா வடபழனி சிகரம் ஹாலில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு கிங்மேக்கர்ஸ் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் டாக்டர் எஸ். ராஜசேகர் தலைமை தாங்கினார்.கிங்மேக்கர்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.கே. கிருஷ்ணன்,முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் வெ. பொன்ராஜ்,அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் – தேசிய தலைவர் ஆ.ஹென்றி
ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டனர்.

விழாவில் கிங்மேக்கர்ஸ் நிறுவனத்தின் ” பொன் விளையும் பூமி” பண்ணை நிலம் திட்டம் தொடங்கப்பட்டது.

கல்விக்கண் திறப்போம்..கல்லாமையை இல்லாமல் ஆக்குவோம் என்ற கருத்தை வலியுறுத்தும் ” கலைக் கூத்தாடி” குறும்படம் வெளியிடப்பட்டு அப்படத்தை இயக்கிய இயக்குனர் பிரபுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முன்னதாக தனன்னம்பிக்கை பயிற்சியாளர் நந்தகுமார் உற்சாக உரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியை டிவி தொகுப்பாளர் மோகன்ராஜ் தொகுத்து வழங்கினார்.
விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.கே. கிருஷ்ணன் பேசுகையில்..ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் பலரும் இத்தொழிலில் லாபம் ஈட்டி தனது குடும்பத்தினரையும் உறவினர்களையும் முன்னேற்றம் அடையச் செய்கின்றனர். ஆனால் கிங்மேக்கர்ஸ் ராஜசேகர் போன்றோர்
தான் வளர்வதோடு தன்னை சுற்றி இருப்பவர்களின் மேம்பாட்டிற்காகவும் பாடுப்பட்டு வருகின்றனர். தனது கிங்மேக்கர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் நூற்றுக்கும் மேலான ஊழியர்களுக்கு நாள்தோறும் உணவு வழங்கி வருகிறார் என்பதில் இருந்தே அவரது சமூக நோக்கம் புலப்படுகிறது.

வெற்றி பெற நினைப்பவர் தன்னை சுற்றி இருப்பவர்களின் நேசத்தையும் பாசத்தையும் பெற வேண்டும். அதற்காக அவர்களையும் வெற்றி பெற செய்ய வேண்டும். மற்றவர்களின் ஆதரவை பெற்றால் மட்டுமே சாதனை.

தான் வளர்வதோடு தன்னை சுற்றி இருப்பவர்களின் மேம்பாட்டிற்காகவும் பாடுபடுவதே நாட்டின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்

பல இன்னல்களுக்கிடையே பல எதிர்ப்புகளுக்கிடையே அவர் ஆற்றி வருகிற தொண்டை நான் அறிவேன். கடந்த 16 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தை சீரும் சிறப்புமாக நடத்தி 17வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். அவர் மக்களிடத்தில் எந்த அளவிற்கு நன்மதிப்பை பெற்றுள்ளார் என்பதற்கு இதுவே சான்று.

ராஜசேகர் போன்ற நாட்டுப் பற்றாளர்கள் மூலமாக தான் இந்த நாட்டு மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும். தலை நிமிர்ந்து நடக்க முடியும் இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *